December 11, 2006

*பாரதிக்கு வணக்கம்

இன்று மகாகவி பாரதியாரின் பிறந்த தினம். எனது முதலாவது வலைப்பதிவினை பாரதிக்கு அர்ப்பணித்திருந்தேன். இன்று பாரதி பிறந்த நாளில் எனது முதலாவது நட்சத்திர பதிவைப் பதிவது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி என்பதை சொல்லத் தேவையில்லை.

இன்று பாரதியார் இருந்தால் அவருக்கு வயது 124 இருக்கும். ஆனால் அவர் வாழ்ந்தது ஆக 39 ஆண்டுகளே. தனது 5வது வயதிலேயே தந்தை கணக்குச் சொல்லிக் கொடுத்த்போது, "கணக்கு, பிணக்கு, வணக்கு, மணக்கு, ஆமணக்கு" என்று கவிதையிலேயே அடுக்கியவர். அவர் வாழ்ந்த அந்தக் குறுகிய காலத்தில் கவிஞராக மட்டுமல்லாமல், ஒரு தலைசிறந்த இதழாளனாக, பத்திரிகை ஆசிரியராக இருந்திருக்கிறார். பாரதியாரின் பத்திரிகைத் துறை ஈடுபாட்டை மட்டும் பார்ப்பதே இப்பதிவின் நோக்கம்.

இளசைச் சுப்பிரமணியன் 1904 இலிருந்து 1921 வரை ஒரு பத்திரிகையாளராகப் பவனி வந்தவர். 1904, நவம்பரில் சுதேச மித்திரன் இதழுக்கு இரண்டு ஆண்டுகள் துணை ஆசிரியராக பத்திரிகைத் தொழிலை ஆரம்பித்தார். தொடக்கத்தில் மெய்ப்புத் திருத்தல், பின்னர் செய்தி மொழிபெயர்த்தல். இப்படியாக இரண்டாண்டுகள். அதற்கிடையில் சக்கரவர்த்தினி என்ற பெண்கள் மாத இதழில் ஆசிரியரானார். (சக்கரவர்த்தினி இதழின் முன்பக்கத்தில் ஆங்கிலத்தில் Indian Ladies என்றும் அதனையே தமிழில் தமிழ்நாட்டு மாதர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது). "இளமை மணம், சதி, வரதட்சணை, கைம்பெண் கொடுமை, ஆகியவற்றை எதிர்த்தும், பெண்கல்வி, பெண்ணுரிமை ஆகியவற்றை வலியுறுத்தியும் கட்டுரைகள் வெளியிட்டார். சுதேச மித்திரனில் எழுத முடியாததை எழுதச் சக்கரவர்த்தினி பயன்பட்டது" (முனைவர் பா. இறையரசன்).

"சக்கரவர்த்தினி"யில் இருந்து விலகிய பாரதி, இந்தியா பத்திரிகையில் சேர்ந்தார். 4-05-1906இல் ஆரம்பமாகியது இந்தியா இதழ். அன்று ஈழத்தில் மாதமிருமுறை வெளிவந்து கொண்டிருந்த இந்துசாதனம் என்ற இதழ் தனது 1906 ஆம் ஆண்டின் இதழொன்றில் "இந்தியா"வைப் பற்றி இவ்வாறு எழுதியிருந்தது:

"இந்தியா - இது சென்னைப் பிரமவாதின் அச்சியந்திரசாலையில் வாரத்துக்கொரு முறை 16 பக்கங்கள் கொண்ட 'கிறௌன் போலியோ" சயிஸ் காகிதத்தில் அச்சிட்டு வெளிப்படுத்தப்படும் ஓர் சிறந்த தமிழ்ப் பத்திரிகை. பெரிய இங்கிலீஷ் பத்திரிகைகளில் என்னென்ன விஷயங்கள் எழுதப்படுகின்றனவோ அந்த விஷயங்களெல்லாம் இந்தப் பத்திரிகையிலும் எழுதப்பட்டு வருகின்றன. இதனை வாசிப்போருக்கு இராஜாங்க விஷயங்களில் நல்லறிவும் தேசாபிமானமும் உண்டாகும்."

1909 ஜூலை 7 இந்தியா (புதுவை) இதழில் யாழ்ப்பாணத்தில் சீதன வழக்கத்தின் கெடுதி பற்றி பாரதி இவ்வாறு எழுதுகிறார்:

"சிலோன் நாட்டு, கொழும்பு நகரத்து நோறீஸ் றோட்டு 68 நெ. வீடு ஸ்ரீ க.ண.கோ.பாலப்பிள்ளையவர்கள் எழுதியுள்ள விளம்பரம் நமது பார்வைக்கு வந்தது. அதில் சீதன வழக்கத்தால் உண்டாகும் கெடுதிகளைப் பல யுக்தி அனுபவங்களால் விளக்கிக் காட்டியிருக்கிறார். இந்த வழக்கத்தால் பெண்கள் கற்புக்கும் புருஷன் ஊக்க முயற்சிக்கும் வெகு சுலபமாய்க் கேடுகள் உண்டாகின்றன என்று நாட்டியிருக்கின்றார். இந்த வியாஸம் 22 பாராக்களில் அடங்கியிருக்கிறது. இதை அவசியம் யாழ்ப்பாணவாசிகள் கவனித்து நடந்தால் மெத்த நலமே."

இந்தியா இதழைத் தொடர்ந்து சென்னை பாலபாரதா (1906), புதுவையிலிருந்து வெளியான இதழ்களான விஜயா (1909), கர்மயோகி (1910), தர்மம் (1910), சூரியோதயம், பாலபாரதா ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றினார் நமது இதழியல் முன்னோடி சுப்பிரமணிய பாரதி.

பாரதியாருக்கு பாரதி பட்டம் யாரால் வழங்கப்பட்டது என்ற தகவல் எந்த நூலிலும் காணப்படவில்லை. தற்செயலாக குன்றக்குடி பெரியபெருமாள் எழுதிய கட்டுரை ஒன்றை வாசிக்க நேர்ந்தது. அக்கட்டுரையில் பாரதியாரின் பால்ய நண்பனாயிருந்த சோமசுந்தர பாரதியார் பற்றிக் குறிப்பிடும்போது சோமசுந்தரத்துக்கும், சுப்பிரமணியனுக்கும் பாரதி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தது ஒரு யாழ்ப்பாணத்துப் புலவர் என்பதைத் தெரிவித்திருந்தார். அவரும் அந்தப் புலவரின் பெயரைத் தரவில்லை. ஆனால் ஒரு யாழ்ப்பாணத்துப் புலவரே இப்பட்டத்தை இருவருக்கும் எட்டயபுரத்து சந்நிதானத்தில் புலவர்கள் முன்னிலையில் வழங்கினார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார். இது பற்றி அறிந்தவர்கள் யாராவது இங்கு வந்து தகவலைப் பகிர்வார்கள் என நம்புகிறேன்.

இறுதியாக, மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகையாளர்களைப் பற்றிக் கூறிய கருத்து ஒன்றை இங்கு தருகிறேன். நிருபர் ஒருவரின் கேள்வியும் மகாத்மாவின் பதிலும்:

கே: "பத்திரிகையாளராகிய எங்களுக்கு விடுதலைப் போராட்டத்திலிருந்து விலக்கு தருகிறீர்களே, நாங்கள் தியாகம் செய்ய மாட்டோம் என்பது உங்கள் எண்ணமா?"

ப: "அப்படியில்லை. பத்திரிகைகளில் நீங்கள் பணி புரிவதே தியாக வாழ்க்கை தான். அதனால்தான் விதிவிலக்கு."

இன்று ஈழத்தில் எத்தனை பேர் பத்திரிகைகளில் பணிபுரிந்து தியாகிகளாக, மாமனிதர்களாக ஆகிவிட்டார்கள். மகாத்மாவின் அந்தக் கூற்று காலத்தால் அழியாததே.

ஆதார நூல்: இதழியல் முன்னோடி எங்கள் பாரதியார்.

43 comments:

Anonymous said...

This article describe the data about Bharathi. Gandhi i not a scale to measure everything as well as Sarvaroganivarini.

If anyone has live as journalist, how it is thiyagam.

Try to justify your god bharathi

said...

கழுத்தில் மாலையுடன் கனகரத்தினமே வருக!
எழுத்தில் அனுவத்தை
ஏற்றமுடன் தருக!

SP.VR.சுப்பையா

said...

கனகு, வாழ்த்துக்கள். இவ்வார நட்சத்திரத்துக்கு ஒரு விண்ணப்பம். இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றிய அறிவு என்னைபோன்ற வெகு ஜன பத்திரிக்கை வாசிப்பாளர்களுக்கு மிகக்குறைவு. இவ்வாரத்தில் அவர்களைப் பற்றி அதிகம் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எழுதியன் சிரித்தரன் (கார்ட்டூனிஸ்ட்) பதிவு மிக சிறப்பாய் இருந்தது.

said...

கனகு, வாழ்த்துக்கள். இவ்வார நட்சத்திரத்துக்கு ஒரு விண்ணப்பம். இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றிய அறிவு என்னைபோன்ற வெகு ஜன பத்திரிக்கை வாசிப்பாளர்களுக்கு மிகக்குறைவு. இவ்வாரத்தில் அவர்களைப் பற்றி அதிகம் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் எழுதியன் சிரித்தரன் (கார்ட்டூனிஸ்ட்) பதிவு மிக சிறப்பாய் இருந்தது.

said...

நட்சத்திரம் ஸ்ரீ அண்ணாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்.

"சுயநலப் பற்றற்று நாட்டிற்கு நற்பணிபுரியும் பரந்த மனப்பான்மையுடன் பத்திரிகையாளன் செயற்படும்போதுதான் பத்திரிகைகள் நாட்டுக்கு பயனுள்ள சேவை செய்ய முடியும்" என்ற மகாத்மா காந்தியின் வரைவிலக்கணத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயற்படும் பத்திரிகாயாளர்கள்/பத்திரிகைகள் இந்நாட்களில் அரிதாகவுள்ளது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

வணக்கம் சிறீ அண்ணா

மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது, நட்சத்திர வாழ்த்துக்கள். தமிழ் அறிஞர்களையும், அவர் தம் படைப்புக்களையும் இதுவரைகாலமும் பதிவிட்ட உங்கள் தனித்துவம் இந்த நட்சத்திரவாரத்திலும் சிறப்பாக மிளிரும் என்பதில் ஐயமில்லை. பாரதியின் பிறந்த நாளில் பொருத்தமாக வந்திருக்கிறீர்கள்

said...

பாரதியின் இதழியல் பங்களிப்புகள் பற்றிய உங்கள் பதிவு அருமை.

பழைய இதழ்களின் புகைப் படங்களைத் தேடிப் பிடித்துப் போட்டதற்கு நன்றி. எப்போதோ இவற்றை நூலில் பார்த்தது. இன்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.

பாரதியின் கேலிச்சித்திரங்கள் பற்றி தனியாக ஒரு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

said...

அனானி,
//Gandhi i not a scale to measure everything as well as Sarvaroganivarini//
காந்தி அப்படிப் பதில் சொன்னது பாரதிக்குப் பொருந்துகிறதா இல்லையா? வருகைக்கும் கருத்தும் நன்றி.

said...

//கழுத்தில் மாலையுடன் கனகரத்தினமே வருக!
எழுத்தில் அனுவத்தை
ஏற்றமுடன் தருக!//
அந்த "சுப்பையா"வின் (பாரதியை சொல்கிறேன்) (எனது முழுப்பெயரிலும் ஒரு சுப்பையா உண்டு!) பதிவுக்கு வந்து கவிதையால் வரவேற்ற சுப்பையா அவர்களே, உங்களுக்கு எனது நன்றிகள். தொடர்ந்து இங்கு வந்து உற்சாகப் படுத்தவேண்டும்.

said...

உஷா, //இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பற்றிய அறிவு என்னைபோன்ற வெகு ஜன பத்திரிக்கை வாசிப்பாளர்களுக்கு மிகக்குறைவு. இவ்வாரத்தில் அவர்களைப் பற்றி அதிகம் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்//
கட்டாயம் முயற்சிக்கிறேன். இவ்வாரத்தில் இருவரைப் பற்றி எழுதும் எண்ணம் உண்டு.

வருகைக்கு நன்றிகள்.

said...

வணக்கம்....kangs அவர்கட்கு....கலக்கலாக பாரதி பற்றிய விடயத்துடன் ஆரம்பத்து உள்ளீர்கள். பழைய பத்திரிகையை பிரதி பண்ணியுள்ளீர்கள் பார்க்க சந்தோசமாகவுள்ளது.......

மகிழ்ச்சியுடனும்.... அன்புடனும் இந்த சின்னக்குட்டி நட்சத்திர வாழ்த்தை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறான்

said...

விருபா, உங்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.
//"சுயநலப் பற்றற்று நாட்டிற்கு நற்பணிபுரியும் பரந்த மனப்பான்மையுடன் பத்திரிகையாளன் செயற்படும்போதுதான் பத்திரிகைகள் நாட்டுக்கு பயனுள்ள சேவை செய்ய முடியும்" என்ற மகாத்மா காந்தியின் வரைவிலக்கணத்தை தாரக மந்திரமாகக் கொண்டு செயற்படும் பத்திரிகாயாளர்கள்/பத்திரிகைகள் இந்நாட்களில் அரிதாகவுள்ளது.//
உண்மை. தமிழகத்தில் எப்படியோ, ஆனால் ஈழத்தில் இன்று பணியாற்றும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் காந்தி சொன்னமாதிரி தியாகிகளே என்பதை மறுப்பதற்கில்லை.

said...

பத்து வருடங்களாக தமிழிணையத்தில் பங்காற்றிவரும் ஒருவர் இன்று நட்சத்திர பதிவாளராயிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பத்தாண்டுகளில் இணையத்தில் தமிழின் வளர்ச்சியை கோடிட்டு ஒரு இடுகை வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்!!

said...

கனெக்ஸ்!
அருமையாகச் சொல்லி பாரதியை நினைவூட்டியுள்ளீர்கள்.பத்திரிகைப் படங்கள்..தகவல்கள் சுவையானவை!
மிக்க நன்றி!
நட்சத்திரமா??,வாழ்த்துக்கள்!
யோகன் பாரிஸ்

said...

பிரபா வணக்கம்,
//இதுவரைகாலமும் பதிவிட்ட உங்கள் தனித்துவம் இந்த நட்சத்திரவாரத்திலும் சிறப்பாக மிளிரும் என்பதில் ஐயமில்லை.//
எல்லாம் உங்கள் வழிகாட்டல் தான்:))
வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து வரவேண்டும்.

said...

சின்னக்குட்டியர், நீங்கள் எனது என்னெஸ்கே பதிவுக்குத் தந்த பின்னூட்டத்துக்கு நன்றிகள். இப்படிப்பட்டவர்களைக் கண்டு கொள்ளக்கூடாது. எங்குமே இருப்பார்கள். வாழ்த்துக்களுக்கு நன்றிகள். நீங்களும் பழைய படப்பிரியர் என்பது தெரியும். நிறைய தர இருக்கிறேன். காத்திருங்கள்:))

said...

தமிழ்மண விண்மீன் வார வாழ்த்துகள் கனக்ஸ். பதிவைப் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

said...

ஜடாயு அவர்களே, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
//பாரதியின் கேலிச்சித்திரங்கள் பற்றி தனியாக ஒரு பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//
இந்தியா பத்திரிகையில் வந்த பாரதியின் கேலிச்சித்திரங்கள் மிகவும் பிரபல்யமானவை. முடிந்தால் கட்டாயம் பதிகிறேன். உங்கள் பாரதி பதிவில் எழுதிய கவிதையும் கார்ட்டூன் படமும் மிக அருமை.

said...

மணியன், வணக்கத்துடன் வரவேற்கிறேன்.
//பத்து வருடங்களாக தமிழிணையத்தில் பங்காற்றிவரும் ஒருவர் இன்று நட்சத்திர பதிவாளராயிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது//
தமிழிணையத்தில் பங்குபற்றிய பலர் இன்று வலைப்பதிவில் சங்கமமாகிவிட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே இன்றும் தமிழ் உலகம், அகத்தியர் குழுமங்களில் எழுதி வருகிறார்கள். தமிழிணையக் காலம் ஒரு பொற்காலம் என்பதை மறுப்பதற்கில்லை. பின்னர் ஆறுதலாகப் பதிகிறேன்.

said...

சிறி!

வணக்கம் , வாழ்த்துக்கள். இந்த வார நடசத்திரம் நீங்களென்பதால், இவ்வாரத்தில், ஈழத்து இலக்கியம் பற்றி நிறையவே எதிர்பார்க்கலாம் என்று நம்புகின்றேன்.

said...

யோகன், வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்.
//பத்திரிகைப் படங்கள்..தகவல்கள் சுவையானவை!//
படங்கள் IE ஊடாக ஏற்றுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அண்மையில் சிட்னியில் நடந்த வலைப்பதிவாளர் மாநாட்டில் (!!)கானா பிரபா தான் ஒரு clue தந்தார். அதன்படி நன்றாக வேலை செய்கிறது:))

said...

கனக்ஸ்,
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

said...

நட்சத்திர வார வாழ்த்துக்கள்

ஊரோடி பகீ

said...

நல்ல பதிவு!

நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்!!

said...

வெற்றி, வாழ்த்துக்களுக்கு நன்றி. கன காலத்துக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

said...

கலாநிதி, வாருங்கள். வாழ்த்துக்களுக்கு நன்றி. விக்கி கருவிப்பட்டை எனது பதிவில் இணைத்திருக்கிறேன். பார்த்தீர்களா?

said...

ஊரோடி பகீ, ஈழத்திலிருந்து இங்கு வந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றிகள்.

said...

சிவபாலன் அவர்களுக்கு, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

said...

கனகு அவர்களே,

கவிஞர் பாரதியின் பிறந்தநாளில் பத்திரிகையாளராக பாரதியை பதிந்தமை நன்று..

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

சாத்வீகன்

said...

கனக்ஸ், நீங்க இந்த வார நட்சத்திரமா..கலக்குங்க..தினம் ஒரு பின்னூட்டு போட்டுத் தாக்கிடுறேன்..துறை சார் முனைப்போடு எழுதுற விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில வலைப்பதிவர்களில் நீங்களும் ஒருவர். வாழ்த்துக்கள். நாளைக்கு எல்லா பதிவையும் பொறுமையா படிச்சுட்டு உங்களுக்கு சொல்லுறேன்

Anonymous said...

வாழ்த்துக்கள் :) வரப்போகும் உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கின்றோம்...

said...

நட்சத்திரக் கிழமையில் எங்கள் தாயகத்து இலக்கியம் பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்.

said...

சாத்வீகன், வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
//பத்திரிகையாளராக பாரதியை பதிந்தமை நன்று.//
பாரதியை கவிஞராகவே அடையாளம் காண்கிறோம். அதற்கும் அப்பால் பத்திரிகையாளர், கார்ட்டூனிஸ்ட் என்று பல துறைகளிலும் அவரின் கால் பதிந்திருக்கின்றன. அது பற்றி நாம் அறிந்தது குறைவு. இப்பதிவு முதலாவது பின்னூட்டமிட்ட அனானி சொன்னதுபோல ஒரு தகவல்பதிவே. கருத்துகளுக்கு நன்றி.

said...

ரவிசங்கர், (அட இது நம்ம ரவியா!), வாங்கோ, வாழ்த்துக்களுக்கு நன்றி.
//..தினம் ஒரு பின்னூட்டு போட்டுத் தாக்கிடுறேன்//
ஐயோ விழுந்திடப்போறன், பார்த்து:))

//நாளைக்கு எல்லா பதிவையும் பொறுமையா படிச்சுட்டு உங்களுக்கு சொல்லுறேன்//
கட்டாயம் வந்து சொல்லுங்கோ. நன்றிகள்.

said...

தூயா, ஈழப் பதிவாளரா நீங்களும். இன்று தான் உங்கள் வலைப்பக்கம் பார்த்தேன். அழகாக எழுதியிருக்கிறீர்கள். இங்கு வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகளும் வணக்கமும்.

said...

வசந்தன், //நட்சத்திரக் கிழமையில் எங்கள் தாயகத்து இலக்கியம் பற்றி நிறைய எதிர்பார்க்கிறேன்//
அப்படி நிறைய எதிர்பார்க்காதீர்கள். மடி அப்படிக் கனமாயில்லை:)). நன்றிகள்.

said...

நட்சத்திர வாழ்த்துகள் Kanags

எட்டயபுர அரண்மனைக் கவிஞர்கள் கவிதை புனைவதில் புதிய இலக்கணத்தை ஏற்படுத்திய சுப்பையாவிற்கு 'பாரதி' (கலைமகள்)
எனும் சிறப்புப் பட்டமளித்து ஊக்கப்படுத்தினர்.

சுப்பையாவிற்குப் 'பாரதி' எனும் பட்டம் வழங்கியவர் யோகியார் சுவாமிகளாவார்கள்.

பாரதி பதிவுக்கு நன்றி.
பதிவு முழுமையும் வாசித்துவிட்டு மறுபடி எழுதுகிறேன்.

said...

வாழ்த்துக்கள்...கனகசிறீ

said...

மகாகவியின் பதிவிற்ககும்,
உங்கள் நட்டசத்திர வாரத்துக்கும் எனது வாழ்த்துக்கள். உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம்.

said...

மதுமிதா, வாழ்த்துக்களுக்கு நன்றி,
//சுப்பையாவிற்குப் 'பாரதி' எனும் பட்டம் வழங்கியவர் யோகியார் சுவாமிகளாவார்கள்//
இந்தத் தகவலைத்தான் தேடினேன். இந்த சுவாமிகளைப் பற்றி மேலதிகமாக உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். தொடர்ந்து வந்து தங்கள் கருத்துக்களைத் தரவேண்டும். நன்றி.

said...

பொட்டீக்கடை சத்தியா, வாருங்கள். சிட்னியை விட்டுக் கிளம்புகிறீர்களா? போகமுதல் கட்டாயம் சந்திப்போம்.

said...

ஈழ செய்தித்தகவல்களை அள்ளித்தரும் ஈழபாரதி அவர்களே, வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.