November 29, 2006

என்னெஸ்கே நினைவுகள்


கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் இன்றாகும். 49 ஆண்டுகள் வாழ்ந்து ஆயிரம் ஆண்டு காலச் சாதனையை கலைத்துறை மூலம் செய்து காட்டியவர். பிறர் மனதைப் புண்படுத்ததாமல் பண்படுத்தும் முறையில் நகைச்சுவையைக் கையாளும் கலை உணர்வு மிக்கவர். 150 படங்களுக்கு மேல் நடித்து சீர்திருத்தக் கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். "பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்; பாலில்லாமல் சிசு பதறுவதைப் பார்" போன்ற கருத்துக்களைக் கூறியவர். அவரது புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது நினைவாக சில அரிய புகைப்படங்களும் "சகுந்தலை" படத்தில் செம்படவர்களாக நடிக்கும் கிருஷ்ணனும், டி. எஸ். துரைராஜும் பாடும் பாடல் வரிகளும் உங்கள் பார்வைக்கு:வெகு தூரங் கடல் தாண்டி போவோமே
மீன் பிடிப்போமே
கட்டு மரம் கட்டிக்கடல் எட்டு மட்டும்
நெட்டித் தள்ளிப்போய்
சுழற் காற்றடித்தாலும் கருமேகம்
கூடி மழை யோடிடித்தாலும்
மிக நஞ்செனவே மிஞ்சி இருள்
தானிருந்தாலும்
அதில் கொஞ்சமுமே நெஞ்சினிலே
அஞ்சிட மாட்டோம்

எனதண்ணன்மாரே இனிவேகமுடன்
கூடி வலை வீசிடுவோமே
நல்ல தூண்டில் முள்ளோடு பல
கயிறோடே தூக்கியெறிந்தே இழுத்தோடும்
நல்ல குறா சுறா உள்ளான் முதல் கெளுத்தி மீனோடு
கடு விரலால் இரால் வாளை எல்லாம் வளைத்திழுத்தோடி
இப்போ கொண்டு வந்தே விலை
கூறி விற்றே காலமதை நாம் கழிப்போமே.
14 comments:

said...

அரிதாகவே கிடைக்கும் புகை படங்களுடன்... என்.எஸ.கே பற்றிய நல்லதொரு பதிவு மிக்க நன்றிகள்..

said...

நாட்டுக்கு சேவை செய்ய வந்த நாகரீகக்கோமாளி அல்லவா அவர். அருமையான புகைப்படங்களுக்கும் பதிவுக்கும் நன்றிகள் அண்ணா

said...

சிறிதரன்!

சின்னக்குட்டியின் கருத்துக்களை நானும் வழிமொழிகின்றேன்.
நன்றி

Anonymous said...

கனெக்ஸ்!
என் எஸ் கே தம்பதிகள் ஒப்பற்ற கலைக் குடும்பம். சமூக சிந்தனையுள்ளவர். அதைத் தன் நடிப்பு பாடல் யாவற்றிலும் வெளிக் கொணர்ந்தவர்.
சிலேடைப் பேச்சிலும் வல்லவர். தமிழ் உணர்ந்தவர்.
ஒர் நண்பர் வீட்டுக்குச் சென்ற போது !
அவர்கள் ரீயா;காப்பியா குடிக்க தருவது;;எனக் கேட்ட போது!
ரீயே!! மதுரம் எனச் சிலேடையாகக் கூறி !!மனைவி மதுரத்தைப் பார்த்தாராம்.
இப்படிப் பல கூறுவார்கள்.
"விஞ்ஞானத்தை வளர்க்கப் போறன்டி!
மேல் நாட்டாரை விருந்துக்கு நான் அழைக்கப் போறன்டி""
இன்றைய இந்தியாவை அன்று நினைத்துப் பாடியது.
முகம் சுளிக்கா!!நகைச்சுவைக்குச் சொந்தக் காரர்.
இன்றையா நகைச் சுவை நடிகர்கள் அவர் படங்களைப் பார்த்து; படிக்க நிறைய உண்டு.
வாழ்க அவர் நாமம்!!
உங்களைப் போன்ற இளைஞர்கள் அவரை நினைப்பது சந்தோசமாக உள்ளது.
யோகன் பாரிஸ்

said...

சின்னக்குட்டி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

said...

மனம் கருப்பா வெளுப்பா என்பதைக் காட்டும் கண்ணாடி சிரிப்பு!
அதை அப்பட்டமாகக் காட்டியவர் கலைவாணர்.
நன்றியுடன் நினைவு கூர்கிறேன்!

said...

கானா பிரபா, நேற்று நீங்கள் இன்பத்தமிழ் ஒலியில் ஒரு மணி நேரம் தொகுத்துத் தந்த கலைவாணர் நினைவுச்சித்திரம் மிகவும் அருமை. நல்ல பழைய பாடல்களுடன் கலைவாணரின் வாழ்க்கைக் குறிப்பும் சேர்ந்து செவிக்கு இன்மையாக இருந்தது. மிக்க நன்றிகள்.

said...

வருகை தந்து கருத்துத் தெரிவித்த மலைநாடானுக்கு நன்றிகள்.

யோகன், கலைவாணரைப் மேலதிக நினைவுகளை இங்கு வந்து பகிர்ந்தமைக்கு நன்றி.

எஸ்கே ஐயா, இங்கு வந்து நினைவுகூர்ந்தமைக்கு நன்றிகள். விரைவில் தனிமடல் போடுகிறேன்:))

said...

அருமை. அருமை. மிகச் சிறப்பு. அருமையான படங்கள்.

said...

குமரன், //அருமை. அருமை. மிகச் சிறப்பு. அருமையான படங்கள்//

எப்பவுமே கருப்பு வெள்ளைப் படங்களைப் பார்ப்பதில் ஒரு தனி இன்பம் தான். வருகைக்கு நன்றி.

said...

நட்சத்திர வாழ்த்துக்கள் !

said...

கோவி கண்ணன் அவர்ர்களே, என்னுடைடைய முதல் நட்சத்திரப் பதிவு அமெரிக்க/அவுஸ்திரேலிய நேரப்பிசகால் தாமதமாகி விட்டது. இங்கு வந்து வரவேற்றதற்கு நன்றிகள்.

said...

கனடிய ஈழத்தவர் எடுத்த படம் எடுத்த காதல் கடிதம் என்ற படத்தில் .....யாழ் தேவி ரயிலில் காதல் செய்தால்.. என்ற பாடலில் யாழ் தேவி ரயிலை பார்க்க
இங்கே அழுத்தவும்

Anonymous said...

நல்லதம்பி படம் பார்த்தேன் இயல்பான நடிப்பு
giritharan