December 14, 2006

*இலங்கையில் ரயில்வேயின் ஆட்சி

அன்று சிலோன் அன்றழைக்கப்பட்ட இலங்கையில் அன்றைய ரயில்வே இலங்கை மக்களுக்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருந்தது. இலங்கை முழுவதையும் ஆட்சி நடாத்திக் கொண்டிருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் தேயிலை தோட்டங்களுக்கும் மற்றைய ஏற்றுமதிப் பொருட்கள் விளையும் முக்கிய இடங்களுக்கும் கொழும்பை மையமாக வைத்துப் புகையிரத நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த ரயில்வே பற்றி சில சுவாரசியமான செய்திகளைப் பகிரலாம் என்றிருக்கிறேன்.


இங்கிலாந்தில் நீராவிப் புகையிரதம் கண்டுபிடிக்கப்பட்டு 40 வருடங்களின் பின்னர் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் முதலாவது நீராவிப் புகையிரதம் 1864 ஆம் ஆண்டு டிசம்பர் 27இல் கொழும்பு கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து தனது முதலாவது சேவையை ஆரம்பித்தது. இது அன்று அம்பேபுச வரையில் சென்றது. அதன் பின்னர் கண்டிக்கு 1867 இலும், காலிக்கு 1894இலும், நீர்கொழும்புக்கு 1909 இலும் சேவைகள் ஆரம்பித்தன. இவை அனைத்தும் அகலப் பாதையில் (அதாவது 5 அடி 6 அங்) அமைந்தவை.

முதலாவது குறுகிய (2 அடி 6 அங்) ரயில் பாதை 1900 ஆம் ஆண்டில் மருதானையிலிருந்து அவிசாவளை வரை அமைக்கப்பட்டது. இது அப்போது மட்டுமல்ல இன்றும் ஒரு வேண்டாத விருந்தாளியாகவே கருதப்படுகிறது. இப்புகையிரதம் எப்படி இலங்கைக்கு அறிமுகமானது?

இந்த குறுகிய பாதை புகையிரதம் இங்கிலாந்தின் கம்பனியொன்றால் தென்னாபிரிக்காவுக்காக முதன் முதலில் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தென்னாபிரிக்கா தனது தேவைகளுக்கு அது உகந்ததல்ல எனக் காரணங்காட்டி அதனை வாங்க மறுத்துவிட்டது. அக்கம்பனி உரிமையாளரின் சகோதரர் அப்போது இலங்கையில் கவர்னராக இருந்தார். கம்பனியை வங்குரோத்திலிருந்து காப்பாற்ற இலங்கை கவர்னர் தனது சகோதரருக்கு அபயமளிக்க முன்வந்தார். அதனை இலங்கைக்கு கொண்டுவர அனுமதித்தார். அப்படியான வேண்டாப் பொருளாக இலங்கைக்கு வந்ததுதான் இந்த குறுகிய பாதைப் புகையிரதம்.

மிக மெதுவாகவே இப்புகையிரதம் செல்லும். இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (நான் தினமும் 153 இலக்க பஸ்சில் பாடசாலைக்குப் போகும்போது இந்தப் புகைவண்டியை தெமட்டகொட புகையிரதக் கடவையில் அநேகமாக சந்திப்பது வழக்கம். ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் காத்து நிற்போம். அவ்வளவுக்கு மெதுவாகச் செல்லும்).

(யாழ்ப்பாணத்தில் ரயில் பாதை அமைக்கும் வேலைகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிகிறது)

அன்றைய புகையிரதங்களில் உணவகங்கள் அற்புதமானவை. ஒரு முழுப் பெட்டியே உணவகமாக மாற்றப்பட்டிருக்கும். சமையலறை, இருந்து உண்ண மேசைகள், சீருடை அணிந்த சேவகர்கள்.( 30, 40 களில் Sir Donatus Victoria's Catering Service என்ற நிறுவனமே இந்த உணவகங்களைப் பராமரித்து வந்தது). யாழ்ப்பாண இரவு மெயில் வண்டியில் இந்த உணவகம் மிகவும் பிரசித்தம். மதுபான வகைகள், சிற்றுண்டி வகைகள், தேநீர் அனைத்தும் கிடைக்கும்.


அக்காலத்தில் புகையிரத ஓட்டிகள் பலர் பிரித்தானியாவிலிருந்து தருவிக்கப்பட்டனர். நீராவி இயந்திரத்தில் இருந்து ஓட்டுனர் வெளியே எட்டிப் பார்ப்பது போன்ற காட்சிகள் வழமை. (இன்று Thomas The Tank Engine இல் இக்காட்சிகளை அடிக்கடி பார்க்கலாம்). இரண்டாம் உலக யுத்த காலத்தில் நிலக்கரிக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் அப்போது எரிவிறகுகளே புகையிரத்துக்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இலங்கை சரித்திரத்தில் அக்காலத்தில் நடந்த ஒரு பயங்கர ரெயில் விபத்து 1928 இல் மார்ச் 12 இல் நடந்தது. களுத்துறையில் இருந்து 2 மைல் தூரத்தில் கட்டுக்குருந்தை என்ற இடத்தில்.

மாத்தறையிலிருந்து புறப்பட்ட கடுகதி (வழக்கம் போலவே நிறைந்திருந்தது). இதன் ஓட்டுனர் David Henry Cowe. இது இரவு மலைநாட்டு தபால் புகையிரதத்தைச் சந்திக்க வேண்டும். சிவனொளிபாத மலையில் அப்போது விசேடமான நாட்கள். பலர் மூட்டை முடிச்சுகளுடன் யாத்திரை கிளம்பியிருந்தனர்.

எதிரே வந்து கொண்டிருந்தது மருதானையிலிருந்து அளுத்கமைக்குப் புறப்பட்ட புகையிரதம். கொழும்பில் வேலை முடித்து பலர் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன் ஓட்டுனர் Percy Bennet.

மாத்தறை கடுகதி சில நிமிடங்கள் தாமதமாகியதால், அளுத்கமை புகையிரதத்தை லூப் லைனுக்கு மாற்ற முடிவு செய்தனர். புகையிரத நிலையத்தில் Tablet கொடுப்பதில் ஏற்பட்ட சில சிக்கலில் ஓட்டுனர் அதைத் தவறாகப் புரிந்துகொண்டு புகையிரதத்தை எடுத்துவிட்டார்.

சில நிமிட நேரங்களில் தவறு நடந்து விட்டது புகையிரத நிலைய ஊழியர்களுக்குத் தெரிந்துவிட்டது. ஆனால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இரண்டு புகையிரதங்களும் நேருக்கு நேரே மோதிக் கொண்டன. மோதல் சத்தம் மூன்று மைலுக்கப்பாலும் கேட்டதாம். கடுகதியின் எஞ்சின் முற்றாக சேதமடைந்தது. இரண்டு எஞ்சின் ஓட்டுனர்கள் உட்பட 28 பேர் இறந்தனர். 100க்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

ஒரு கொள்ளைச் சம்பவம் 1945 ஜுலை 27 இல் நடந்தது. கொழும்பிலிருந்து தலைமன்னாருக்குப் புறப்பட்ட இரவு தபால் வண்டியில் நடந்த கொள்ளைச் சம்பவம்.
எஸ். செல்லத்துரை என்பவர் கார்டாக (under guard) இருந்தார். அவர் இருந்த பெட்டி எஞ்சினுக்குக் கிட்டவாக இருந்தது. இப்பெட்டியில் நிறைய தபால் பொதிகள் இருந்தன.

நடுநிசி நேரம் கல்கமுவைக்கு சமீபமாக இப்பெட்டிக்குள் புகுந்தனர் கொள்ளையர்கள். பெட்டி முழுவதும் துப்பாக்கிச் சூடுகளும், இரத்தக் கறைகளும் பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இது நடந்தது ஓட்டுனருக்கோ பயணிகளுக்கோ தெரியவில்லை.
புகையிரதம் அநுராதபுரம் வந்த பிறகே விபரீதம் நிகழ்ந்ததைக் கண்டுபிடித்தனர். செல்லத்துரையைக் காணவில்லை. பொலீசாருக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த இரவு மெயிலின் ஓட்டுனருக்கு, மாகோ வரை மெதுவாக செலுத்தும் படியும் இரண்டு பக்கமும் கவனமாகப் பார்க்கும்படியும். அப்படியே செல்லத்துரையின் சடலம் கல்கமுவையில் பாதைக்குப் பக்கமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அப்பாவி ஓட்டுனரும் அச்சடலத்தை எடுத்து மாகோவுக்குக் கொண்டு சென்றுவிட்டார். (இதனால் கையடையாளங்கள் மற்றும் தடயங்கள் அழிந்துபோனதாக பொலீசார் தெரிவித்தனர்).

ஆச்சரியம் என்னவென்றால் பெரிதாக கொள்ளை எதுவும் போனதாகத் தெரியவில்லை. நான்கு தபால் பொதிகள் ம்ட்டும் திறந்து பார்க்கப்பட்டிருந்தது.அவை யாவும் போலீஸ் அதிகாரிகளின் தபால் பொதிகள். இச்சம்பவம் ஏன் நடைபெற்றது என்பது கடைசிவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

இப்படி சில சம்பவங்களைத் தவிர அன்றைய ரயில் பிரயாணம் அநேகமாக சொகுசானது மட்டுமல்ல மிகவும் பாதுகாப்பானதுமாக இருந்தது. இப்படியாக ஒரு காலத்தில் இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து கொண்டிருந்த ரயில்வேயின் இன்றைய நிலை சொல்லத் தேவையில்லை.

(தகவல்கள் பெற்றுக் கொண்டது The Ceylon We Knew வி. வாமதேவன் எழுதிய நூலில் இருந்து)

சிரித்திரன் சுந்தரின் ஒரு பகிடி இந்த நேரம் ஞாபகம் வருகிறது:

கே: தூங்கிக்கிடந்த தமிழனைத் தட்டி எழுப்பியது யார்?

மகுடி: அநுராதபுரத்தில் ரயிலில் ஏறிய சிங்களப் பிரயாணி.


28 comments:

said...

ரயில் வந்த கதை நன்றாக இருந்தது, படங்களும் அருமை.
எனக்கு இப்போதும் ஊரில் ரயில் பயணம் செய்ய ஆசை, அதனால் தான் நான் கூட ரயிலைப் பற்றி ஒரு பதிவு முன்னர் எழுதியிருந்தேன். யாழ்தேவி தான் இலங்கை ரயில் போக்குவரத்துக்களில் அதிகம் சம்பாதித்துக் கொடுத்தது, குறிப்பாக 90 ஆம் ஆண்டு இலாப நிலவரம். இப்போது தண்டவாளமும் இல்லை. 16 வருஷமாக யாழ்தேவி வவுனியாவோடு நின்றுவிடுவாள்:.
யாழ்ப்பாணத்து ரயில் பெட்டிகளுக்குள் அகதிகள் குடித்தனம்.

Anonymous said...

வணக்கம்...கனக்ஸ் அவர்களே... அருமையான நினைவு மீட்டலை தந்ததுக்கு...நன்றி.

எனது தகப்பனாருடன் 70களில் விடுமுறைக்கு சென்ற போது.பார்த்திருக்கிறேன்..மருதானையிலுள்ள சிக்னல் கட்டு பாட்டு அறையில்.. இருந்து கொண்டு பொல்காவலைக்கும் கொழும்பு கோட்டை கிடையில். ஓடும் ரயில் எவ்விடத்தில் செல்வது என்று அவதானிக்க கூடியதாய் இருந்தது... அப்பொழூதே இலங்கை ரயில்வே நவீனமாயிருந்தது.

ரயிலில் இருக்கும் உணவகம்...buFfet பபற் இல்லையாம் புபே என்று யாரோ சொன்ன ஞாபகம்...

இலங்கையின் so call சுதந்திரத்தின் முதல் ரயில்வே துறையின் மாஅதிபர். தாபற்சேவையின் மாஅதிபர் தமிழர்கள் என்று குறிப்பிட தக்கது... இதில் குறிப்பிட்டு சொல்லணு மென்றால்
தாபற் சேவையின் முதல் மாஅதிபர் சிரித்திரன் சுந்தரின் தகப்பனார் என்பது குறிப்பிட தக்கது..

said...

Really a good posting and it is also very interesting!

SP.VR.Subbiah

Anonymous said...

அருமையான பதிவு.நான் உணுப்பிட்டியவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் வசித்தேன்.
யாழ்ப்பாணம் - உத்தரதேவி, யாழ்தேவி,
அனுராதபுரம் - ரஜரட்ட ரஜனி,
கண்டி - உடரட்ட மெனிக்கே, பொடி மெனிக்கே
சிலாபம் - முத்துக்குமாரி
மட்டக்களப்பு - உதயதேவி, ஹிஜ்ரா
என்ற பெயரில் ஓடின. நாங்கள் தினமும் பார்ப்போம்.
2005 இல் பட்டிப்பொலவிலிருந்து பதுளை வரை பயணம் செய்தேன்.மிக அழகாக இருக்கும். கொழும்பு - கண்டி பயணத்தை விட இது அழகு.
மேட்டுப்பாளயத்திலிருந்து ஊட்டி வரை அந்தப் பழைய ரெயிலில் 2006 இல் பயணித்தேன். எனக்கு பட்டிப்பொலவிலிருந்து பதுளையே பிடிக்கிறது.
நீங்கள் கண்டியிலிருந்து புறப்படும் 3 பெட்டி புகையிரதத்தில் ஏறினால் தான் அது எல்லா இடத்திலேயும் நின்று ஆறஅமரப் போகும்.

பிரகலாதன்

said...

பிரபா,
//யாழ்தேவி தான் இலங்கை ரயில் போக்குவரத்துக்களில் அதிகம் சம்பாதித்துக் கொடுத்தது//
யாழ்தேவி மட்டுமல்ல யாழ் மெயில், உத்தரதேவி அனைத்துமே பெரும் வருவாயைத் தேடித்தந்தவை. யாழ்ப்பாண கிளறிக்கல் சமூகம் இந்த ரயில்களில் வளர்ந்தவை தானே.

//யாழ்ப்பாணத்து ரயில் பெட்டிகளுக்குள் அகதிகள் குடித்தனம்.//

அகதிகளுக்காவது உதவட்டும்.
நன்றி பிரபா.

said...

சின்னக்குட்டியர்,
//தாபற் சேவையின் முதல் மாஅதிபர் சிரித்திரன் சுந்தரின் தகப்பனார்//
அந்தத் தகவலுக்கு நன்றி.

said...

சுப்பையா அவர்களே, உங்கள் குறுங்கவிதையை எதிர்பார்த்தேன்:))

said...

ஆகா நட்சத்திரப் பதிவாளர் கேட்டுவிட்டீர்கள் - கொடுத்துவிட்டேன்

"இரயிலும் அழகுதான் மயிலும் அழகுதான்
இலங்கைத்தமிழில் கதைத்தால் எல்லாம் அழகுதான்!"

SP.VR.சுப்பைய்யா

said...

//இந்தப் புகையிரதப் பாதை பின்னர் 1912 இல் இரத்தினபுரி வரையில் விஸ்தரிக்கப்பட்டது. (அப்போது நான் தினமும் 153 இலக்க பஸ்சில் பாடசாலைக்குப் போகும்போது இந்தப் புகைவண்டியை தெமட்டகொட புகையிரதக் கடவையில் அநேகமாக சந்திப்பது வழக்கம். ஐந்து, பத்து நிமிடங்களுக்கு மேல் காத்து நிற்போம்).//

1912 இல நீங்க பள்ளிக்கூடம் போன ஆளா.. அட.. உங்களுக்கு 94 வயசு.. யம்மாடியோவ்--

Anonymous said...

சிலோன் ரயிலென்றால் அந்த வடே வடே;பார்லி,தெமிலி..;காதுக்க கேட்குது.அது ஓர் இன்பமான காலம்
யோகன் பாரிஸ்

said...

பிரகலாதன்,
//நான் உணுப்பிட்டியவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் வசித்தேன்.//
அங்கு வசித்தீர்களா? அப்பகுதிக்கு நான் சிறுவனாக இருக்கும் போது அடிக்கடி வருவேன். எமது குடும்ப நண்பர் ஒருவர் அங்கு புகையிரத நிலையமருகே (புகையிரதப் பாதையுடன் போகும் வீதியில்) குடி இருந்தனர்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகலாதன்.

said...

சுப்பையா அவர்களே,
//ஆகா நட்சத்திரப் பதிவாளர் கேட்டுவிட்டீர்கள் - கொடுத்துவிட்டேன்

"இரயிலும் அழகுதான் மயிலும் அழகுதான்
இலங்கைத்தமிழில் கதைத்தால் எல்லாம் அழகுதான்!"//

கேட்டவுடன் ஒடி வந்து கொடுத்து விட்டீர்கள். அருமை. நன்றி ஐயா.

said...

கொழுவி,
//1912 இல நீங்க பள்ளிக்கூடம் போன ஆளா.. அட.. உங்களுக்கு 94 வயசு.. யம்மாடியோவ்-- //
வேல மினக்கெட்டு கூட்டிக் கழித்தும் பிழையாய்த்தான் கணக்குப் பார்த்திருக்கிறீர். பள்ளிக்கூடம் போகேக்க வயசு ஆறு. இப்ப சரியாக்கணக்கிடும் பாப்பம்:))

said...

கனாக்ஸ்
நல்ல நினைவு மீட்டல்.

சின்னக்குட்டி
உங்கள் தந்தை ரெயில்வேயில் வேலை செய்தாரா?

said...

யோகன்,
//சிலோன் ரயிலென்றால் அந்த வடே வடே;பார்லி,தெமிலி..;காதுக்க கேட்குது. அது ஓர் இன்பமான காலம்//
மாகோச் சந்தி வந்ததும் வடை, தெமிலிக்காரர்கள் கூவிக்கொண்டு திரிவார்கள். அவர்களுக்கு யாழ் ரெயிலை விட்டால் வியாபாரம் இல்லை. களைத்துப்போய் இருக்கும் பிரயாணிகளுக்கு அவை அமிர்தமாகவே இருக்கும்.

said...

சந்திரவதனா, வருகைக்கு நன்றிகள்.

Anonymous said...

//சின்னக்குட்டி
உங்கள் தந்தை ரெயில்வேயில் வேலை செய்தாரா//

இல்லை...சந்திரவதனா.... எனது தகப்பனார்....25 வருடங்களுக்கு மேல் 77 கலவரம் வரை கொழும்பில் வேலை பார்த்தவர்...மருதானையிலுள்ள....கப்பித்தாவத்தை பிள்ளையார் கோயிலுக்கருகில் இருக்கும் விடுதியில் நீண்டகாலமாக வாடகைக்கு இருந்தவர்....

said...

நூறு கண்ட வர
லாறு ஐயா நீர்..

ம்.. முன்பெல்லாம் பிறந்த உடனை பள்ளி போறேல்லைத்தானே..

இப்பதான் அப்படி

said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

புகைவண்டி எண்டால் என்ன.. அதுக்கு கெலிகொப்ரர் மாதிரி மேலை விசிறி இருக்குமோ
முக்கியமா அது குண்டு போடுமோ..

said...

கொழுவி,
//நூறு கண்ட வர
லாறு ஐயா நீர்..

ம்.. முன்பெல்லாம் பிறந்த உடனை பள்ளி போறேல்லைத்தானே..//
சரி, சரி, திருத்திப் போட்டன்::))

said...

கனடிய ஈழத்தவர் எடுத்த படம் எடுத்த காதல் கடிதம் என்ற படத்தில் .....யாழ் தேவி ரயிலில் காதல் செய்தால்.. என்ற பாடலில் யாழ் தேவி ரயிலை பார்க்க அழுத்தவும்

said...

ஒரு பிள்ளை,
//புகைவண்டி எண்டால் என்ன.. அதுக்கு கெலிகொப்ரர் மாதிரி மேலை விசிறி இருக்குமோ
முக்கியமா அது குண்டு போடுமோ.. //

இக்காலத்தில் ஈழத்துப் பிள்ளைகளுக்கு குண்டு போடும் ஹெலியையும் விமானத்தையும் தான் தெரியும், ஆனால் சாதாரண புகைவண்டியைத் தெரியாது. உங்கள் ஆதங்கம் புரிகிறது ஒரு பிள்ளை.

Anonymous said...

நல்ல பதிவு கனக்ஸ்,
எனது பள்ளிக்கூடம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு மிக அண்மையில் இருந்ததனாலும் பாடசாலைக்கும் வீட்டுக்கும் செல்லும் போது கடவையை கடந்துசெல்லவேண்டியதாலும் இரயிலுடன் நல்ல பரிச்சயம் உண்டு. காரைக்காட்டு கோவிலுக்கு அருகில் ரயில் வரும்போதே எட்டியே நிற்கும் நான் இரயில் மிக அண்மையில் வரும்போதுகூட மிகவும் ஆறுதலாக பாதையைக் கடக்கும் ஆடுகளைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். தண்டவாளத்தில், கையில் கிடைக்கும் பொருட்களை வைத்து அவை ரயிலினால் நசிக்கப்பட்டு விதவிதமாக மாறுவதை ரசிப்போம். ஆனாலும் நசிக்கப்பட்ட ஆணி, சோடாப்போத்தல் மூடி போன்றவற்றுக்கே 'மவுசு' அதிகம். 'அழியத கோலங்கள்' படத்தில் வருவதுபோல் கேற் சாத்தும்போது அதில் உட்கார்ந்திருப்பது சந்தோசமான அனுபவம். ஈழத்தின் புகழ் பெற்ற 'பொப்' பாடகர் ஸ்ரனி சிவாநந்தன் ஆரம்பகாலத்தில் எமது பள்ளிக்கூட அருகாமையில் கடவைக் காவலராக இருந்ததாக நினைவு.

கீழுள்ள சுட்டியில் சுவாரசியமான இலங்கை ரயில் சம்பந்தமான படங்களைப்பார்க்கலாம்...

http://www.toccata.demon.co.uk/page4.html

http://www.gyan.doctors.org.uk/index.htm

said...

அனானி,

//ஈழத்தின் புகழ் பெற்ற 'பொப்' பாடகர் ஸ்ரனி சிவாநந்தன் ஆரம்பகாலத்தில் எமது பள்ளிக்கூட அருகாமையில் கடவைக் காவலராக இருந்ததாக நினைவு.//

ஸ்ரனி சிவானந்தன், நித்தி ஆகியோர் சமகாலத்தவர்கள் என்று நினைக்கிறேன். அந்தத் தகவலுக்கும் சுட்டிகளுக்கும் நன்றிகள்.

Anonymous said...

//ஸ்ரனி சிவானந்தன், நித்தி ஆகியோர் சமகாலத்தவர்கள் என்று நினைக்கிறேன்//
ஆம், அவர்களுடன் கொக்குவிலில் இருந்த அமுதன் அண்ணாமலையையும் சேர்த்துக்கொள்ளலாம். ஓ ஷீலா..ஒ லீலா , மாணிக்கத்தேரிலே மயில்வந்தது, என்ற பாடல்கள் அவர் பாடக்கேட்டிருக்கிறேன். பொப் பாடல்களின் அந்திம(??) காலத்தில் அத்துறைக்கு வந்ததனால் அவர் அதிகம் பாடவில்லை என நினைக்கிறேன்.

said...

//Anonymous said...
நல்ல பதிவு கனக்ஸ்,
எனது பள்ளிக்கூடம் கோண்டாவில் ரயில் நிலையத்துக்கு மிக அண்மையில் இருந்ததனாலும்//


வணக்கம் அநாமோதய நண்பரே

கோண்டாவில், காரைக்கால் போன்ற என் அயற்கிராமங்களையும் பல பழைய விஷயங்களையும் சொல்லியிருக்கிறீர்கள், முடிந்தால் என் தனி மடலுக்கு ஒரு மடல் போட முடியுமா?

said...

இலங்கையில் மிக உயரத்தில் அமைந்துள்ளது புகையிரதநிலையம் எது