பிரபல கலை இலக்கிய விமரிசகர் ஏ. ஜே. கனகரத்னா அவர்கள் இன்று கொழும்பில் காலமானார் என்ற செய்தி இன்று எனது மின்னஞ்சலுக்கு வந்தது. 60கள் முதல் 90கள் வரை ஈழத்து இலக்கியத்தில் வலுவான இடத்தை அடைந்தவர் ஏஜே. குறிப்பாக அவரது மொழிபெயர்ப்புகளும் விமரிசனக்களும் சிறப்பு வாய்ந்தவை. பல ஈழத்து, தமிழக எழுத்தாளர்களின் ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். பல ஆங்கிலக்கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்.
யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழித்துறையில் கடமையாற்றினார். கடைசி வரை யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்த இவர் கடுமையாக நோய் வாய்ப்பட்ட போது கொழும்பில் தங்கி கடந்த ஒன்றரை வருடகாலம் சிகிச்சை பெற்று வந்தார்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஏஜேயின் "மத்து" கட்டுரைத் தொகுதி பற்றிய பார்வையை யமுனா ராஜேந்திரன் இங்கு பதிந்திருக்கிறார்:
பதிவுகள் இணையத்தளம்
ஏஜேயின் செங்காவலர் தலைவர் யேசுநாதர் கட்டுரை மதியின் தளத்தில் உள்ளது:
செங்காவலர் தலைவர் யேசுநாதர்
விக்கிபீடியாவில்: ஏ. ஜே. கனகரத்னா
சக வலைப்பதிவர்களின் நினைவுப்பதிவுகள்:
11 comments:
அன்னாருக்கு ஆத்மா சாந்தியடைய என் அஞ்சலிகள். பதிவைப் பின்னர் முழுமையாக வாசிக்கின்றேன்.பொருத்தமான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றிகள் அண்ணா.
ஏ.ஜே ஈழ இலக்கியப்பரப்பில் தவிர்க்கமுடியாத ஒரு ஆளுமை. முக்கியமாய் அவரது ஆங்கிலமொழிபெயர்ப்புக்கள் அற்புதமானவை. எதன்பொருட்டும் சொந்தமண்ணை விட்டு புலம்பெயரமாட்டேன் என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர் ஏ.ஜே. சில வருடங்களுக்கு முன் 'காலம்' சஞ்சிகை ஏ.ஜே சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டு அவரைக் கெளரவித்திருந்தது.
கானா பிரபா, உங்கள் அஞ்சலி நிகழ்ச்சியை வானொலியில் கேட்டேன். மிகவும் அருமை. ஒரு வானொலி ஊடகத்தால் செய்யக்கூடியதை மிகவும் திருப்திகரமாகச் செய்திருந்தீர்கள். விபரமாக உங்கள் பதிவில் எதிர்பார்க்கிறேன்.
இன்று மதியம்தான் அறிந்தேன். ஈழத்து இலக்கியபரப்பில் நிகழ்ந்துள்ள பேரிழப்பு.
என் அஞ்சலிகளைச் சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.
அறியத் தந்ததற்கு நன்றி. அவர் சாந்தியடைய வேண்டுகிறேன். குடும்பத்தாருக்கு எனது அனுதாபங்கள்.
கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இவரது படைப்புகளை வாசித்ததில்லை. வாசிப்பு இன்னும் பரந்துபட வேண்டும் என்று இன்னுமொருமுறை (எனக்கு) அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. :O\
டிசே, தங்கள் அஞ்சலியைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள். அன்னாரின் அண்மைக்கால மொழிபெயர்ப்பு ரெஜி சிறிவர்தனாவின் கட்டுரைகள். இதனை வாசிக்கக் கிடைக்கவில்லை.
மலைநாடான், இங்கு வந்து தங்கள் அஞ்சலிகளைப் பதிந்தமைக்கு நன்றிகள்.
ஷ்ரேயா, //கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர இவரது படைப்புகளை வாசித்ததில்லை.//
அவரது கட்டுரைகளை (குறிப்பாக விமரிசனங்களை) அக்காலத்தில் மல்லிகையில் வாசித்திருக்கிறேன். அண்மைக்காலத்தில் அவர் நிறைய எழுதவில்லை. எனவே தான் தவறவிட்டிருப்பீர்கள்:)).
ஏ.ஜே. என்ற ஆளுமை பற்றிய உங்கள் எல்லோரினதும் அஞ்சலி சிறப்பானது
அன்பின் மேமன்கவி அவர்களே, தங்கள் வருகையால் எனது வலை சிறப்புப்பெற்றது. அமரர் ஏஜே பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து சிறப்புப் பதிவுகள் இட்ட கானா பிரபா மற்றும் மதி அவர்களுக்கும் உங்கள் வாழ்த்துக்கள் சென்றடையும். வருகை தந்து கருத்துத் தெரிவித்தமைக்கு நன்றிகள்.
சிவராம் ஏஜே இருவருமே நம்பிக்கைதரக்கூடிய ஆளுமைகளாய் அண்மை காலம் வரை இருந்தவர்கள்.ஏஜேயிடம் நிறைய தகவல் இருந்தது இருப்பினும் ஜூன் மாதத்தில் நான் அவரை சந்தித்த போது கேதாரநாதன் அவர்களே நிறயவற்றை அவருக்கு ஞாபகப் படுத்தினார்.
உங்களிடம் ஏஜே குறித்து புதிய தகவல்கள் அல்லது புகைபடங்கள் இருந்தால் அனுப்பிவைக்க முடியுமானால் நல்லது.சற்றடே ரிவியூ காலம் பற்றியும் தமிழ் பத்திரிகை சூழல் குறித்தும் கடந்த வருடத்தில் ஏஜே என்னுடன் பேசினார் சிவராம் கொலைக்கு பின்னரான ஆவணப் படுத்தலுக்காக அதனை ஒளிப்பதிவு செய்திருந்தேன்.
அதில் சிலவற்றை notheastern monthly யில் எழுதியிர்ந்தேன்.
http://www.tamilcanadian.com/page.php?cat=514&id=3296
Post a Comment