September 03, 2006

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு வேண்டுகோள்!

கலைஞர் கருணாநிதி தொல்காப்பியர் விருது பெறுவதை சாத்தியமாக்கியவர் சி.வை. தாமோதரம்பிள்ளையே!

மிழ் இலக்கியத் துறையில் சிறப்பான தொண்டாற்றியவர்களுக்கு இந்த ஆண்டு (2006) முதல் தொல்காப்பியர் விருது வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்து இதன்படிமுதல் ஆண்டு விருதை பாமரரும் புரிந்து கொள்ளும் இலகு தமிழில் தொல்காப்பிய பூங்கா எழுதிய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களுக்கு வழங்குவதெனவும் முடிவு செய்திருத்தல் தெரிந்ததே!.

சென்னை கலைவாணர் அரங்கில் செப்டெம்பர் 4 ஆம் திகதி நடைபெறும் நிகழ்ச்சியில் இஸ்லாமியத் தமிழரும், தமிழ் அறிஞருமாகிய இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இவ்விருதினை வழங்குகிறார். ரூபா ஒரு இலட்சம் ரொக்கமும், தொல்காப்பியர் உருவம் பொறித்த தங்கப் பதக்கமும், வெள்ளியில் ஆன பட்டயமும் இவ்விருதில் அடங்கும்.

வழக்கமாக தகுதிச் சான்றிதழை எழுத்துக்களில் வடித்துப் பட்டயம் வழங்கும் முறையை மாற்றி ஓவிய வடிவில் பட்டயம் வழங்க ஆழ்வார்கள் ஆய்வு மையம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாமரரும் புரிந்து கொள்ளும் இலகு தமிழில் தொல்காப்பியப் பூங்கா எழுதிய தமிழக முதல்வர் கருணாநிதி இவ்வாறு பாராட்டப்படுவதாக ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம வீரப்பன் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். ஆயினும், இராம வீரப்பன் இங்கு குறிப்பிடத் தவறிய தகவலும் ஒன்றுண்டு. பாண்டிய மன்னன் கைகளுக்கே கிட்டாததாக வழக்கில் இல்லாது அருகிவிட்டதாகக் கருதப்பட்டு வந்த தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தைத் தமது அரும் பெரும் முயற்சிகளினால் தேடிக் கண்டடைந்து ஒப்பிட்டுப் பரிசோதித்து மீள்வித்துத் தந்ததுடன், தொல்காப்பியத்தின் ஏனைய பாகங்களுடன் அதனை முழுமையாக நூலுருவில் தந்ததன் மூலம் தொல்காப்பியர் விருது பெறும் நல்வாய்ப்பினை தமிழக முதல்வர் கருணாநிதிக்குச் சாதகமாக்கித் தந்திருப்பவர் தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் என்பதே இராம வீரப்பன் குறிப்பிடத் தவறிய அத்தகவலாகும்.

தமிழக முதல்வர் கருணாநிதிக்குத் தொல்காப்பியர் விருது வழங்கும் வைபவத்திலேனும் தொல்காப்பியத்திற்கே வாழ்வளித்த தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரம்பிள்ளை அவர்கள் தாம் தொல்காப்பிய பூங்கா எழுதியதால் தமிழக முதல்வர் கருணாநிதி சம்பந்தப்பட்ட விருதினைப் பெறுவதையும் சாத்தியப்படுத்தியவர் எனும் தகவல் பகிர்ந்து கொள்ளப்படுமா?

தமிழக முதல்வர் கருணாநிதி தொல்காப்பிய பூங்காவினை எழுதுவதன் மூலம் மேற்படி விருது பெறுதலைச் சாத்தியப்படுத்துவதாக முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்துக்கும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் அறிமுகத் தொடர்பினைத் தமிழ் மறுமலர்ச்சியாளர் ராவ் பகதூர் சி.வை.தாமோதரர் எங்ஙனம் ஏற்படுத்தித்தந்திருந்தார் எனும் வரலாற்று உண்மை பகிரங்கப்படுத்தப்படுமா?

விருது வழங்கும் நிகழ்வையடுத்து எதிர்வரும் செப்டெம்பர் 12 ஆம் திகதியில் இருந்தேனும் தமிழக முதல்வர்கள் சி.வை.தா.வின் பிறந்த நாட்களில் அன்னாரைக் கௌரவிக்கும் சிறப்புச் செய்தியை வெளியிடும் புதிய வரலாற்றினை தொல்காப்பியப் பூங்கா விருது பெறும் கலைஞர் மு.கருணாநிதி ஆரம்பித்து வைத்தல் வேண்டும்.

சென்னை உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் போது தமிழ் வளர்த்த பெரியார்களுக்கு சிலைநிறுவிப் பெருமைப்படுத்திய கருணாநிதி, தாமோதரரை அப்போது தவறவிட்ட குறையைத் திருத்திக் கொள்வதற்கு ஏனைய வேறு வழி கிடையாது. ஆகவே , தாமோதரர் பிறந்த நாளான செப்டெம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொல்காப்பியத்தை மீள்வித்துத் தந்த தாமோதரரைப் போற்றும் சிறப்புச் செய்தி வெளியிடுதல் வேண்டும்.

நன்றி: தினக்குரல்


6 comments:

said...

தமிழறிவு இல்லாத என் போன்றோரும் படித்துப் பயன் பெறக் கூடியவகையில் தொல்காப்பியத்தை இலகு தமிழில் தந்தவர் கலைஞர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே நேரம் அந்த அரும் பெரும் நூலைத் தேடிக் கண்டுபிடித்து, பாதுகாத்து இனி வரும் பல தலைமுறையினரும் பயன்பெறும் வண்ணம் செய்த சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் நினைவு கூரப்பட்டு கெளரவிக்கப்பட வேண்டியவர் என்பதிலும் மாற்றுக்கருத்தேதும் இருக்க முடியாது. கலைஞர் இதைச் செய்ய வேண்டும். செய்வார் என நான் நம்புகிறேன்.

said...

//தாமோதரர் பிறந்த நாளான செப்டெம்பர் 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமிழக முதல்வர் மு.கருணாநிதி தொல்காப்பியத்தை மீள்வித்துத் தந்த தாமோதரரைப் போற்றும் சிறப்புச் செய்தி வெளியிடுதல் வேண்டும்.//

மிக முக்கியமான வேண்டுகோள் முதல்வர் நிச்சயம் செய்வார் !

said...

கருத்துத் தெரிவித்த வெற்றி, கோவி. கண்ணன் இருவருக்கும் நன்றிகள். ஈழத்தவர்கள் பலர் (சி. வை. தா., ஆறுமுக நாவலர், சபாபதி நாவலர், கதிரவேற்பிள்ளை, கல்லடி வேலுப்பிள்ளை, விபுலாநந்தர், இன்னும் பலர்) அன்று ஈழத்திலிருந்து தமிழகம் சென்று தமிழுக்கும் சமயத்துக்கும் சிறந்த சேவை ஆற்றியுள்ளனர். அவர்கள் தகுந்த முறையில் தமிழ்நாடு அரசினால் கௌரவிக்கப்படவில்லை. கலைஞர் தனது இந்த ஆட்சிக்காலத்திலாவது அந்தக்குறையை நிவர்த்தி செய்வார் என நம்புவோம்.

said...

வணக்கம் அண்ணா

தமிழகப் பத்திரிகை ஏதாவதொன்றுக்கு குறிப்பாகத் தினகரன் பத்திரிகைக்கு மின்னஞ்சல் மூலம் இப்பதிவை அனுப்பினால் நல்லது.

said...

நன்றி பிரபா, தினகரனுக்கும், தினமலருக்கும் மின்னஞ்சல் மூலம் எழுதியுள்ளேன்.

சென்னையில் இன்று நடந்தது:
சென்னையில், தமிழக முதல்வரிடம் அதிபர் அப்துல் கலாம் கோரிக்கையன்றை
வைத்தார். இணையத்தில் இன்டர்நெட் தமிழ்: உலகில் உள்ள எல்லா மக்களிடமும்
தொன்மையான தமிழ் சென்று சேர வேண்டுமானால், "யுனிகோட்'
மூலம் தமிழை வரைமுறைப்படுத்தி, இன்டர்நெட் தமிழாக இதை உருவாக்க வேண்டும்
என முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இது குறித்து தினமணி வெளியிட்டுள்ள செய்தி:-

இக்கால வளர்ச்சிக்கு தொல்காப்பியத்தின் பயனை அறிய பி.எச்டி. ஆராய்ச்சி:
முதல்வருக்கு விருது வழங்கி கலாம் வலியுறுத்தல்


சென்னை, செப். 5: தொல்காப்பியம் பற்றி 20 பி.எச்டி. ஆய்வுகளை மேற்கொண்டு,
இக்கால வளர்ச்சிக்கு அக்கால இலக்கியம் எந்த வகையில் பயன்படும் என ஆராய
வேண்டும் என குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறினார்.

தமிழக முதல்வர் மு. கருணாநிதிக்கு தொல்காப்பியர் விருதை சென்னையில் திங்கள்கி
ழமை வழங்கி அவர் பேசியதாவது:

தொல்காப்பியம் 3000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதா, அல்லது 2000-க்கும் 3000-
க்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றியதா என்று ஏன் ஆராய வேண்டும்? அந்தக்
காலத்தை அறிந்தால், நாட்டின் கலாசாரம், மக்களின் வாழ்க்கை முறைகளை அறிய
முடியும்.

எனவே, சென்னை பல்கலைக்கழகம், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம், ஆழ்வார்
ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து 20 பி.எச்டி. ஆராய்ச்சிகளை மேற்கொள்ள
வேண்டும்.

அந்தக் கால இலக்கியங்கள் இந்தக் கால சந்ததிக்கு எப்படி பயனுள்ளதாக இருக்கும்
என்று தெளிந்து அறியும் வகையில் இது உதவும். அக்கால மக்களின் ஒற்றுமை
உணர்வு, அறிவின் முதிர்ச்சி, அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை நாம்
இதன்மூலம் அறிய முடியும். அவற்றைப் பயன்படுத்தி ஒற்றுமையான அறிவுசார்
சமுதாயத்தை நாம் உருவாக்க வேண்டும்.

நாட்டில் வளர்ச்சிக்கான எல்லா திறமைகளும், வளங்களும் உள்ளன. அரசியல், தொழில்
உள்ளிட்ட எல்லா துறைகளிலும் உள்ள நிபுணர்களும் இளைஞர்களுக்கு
எடுத்துக்காட்டாக இருக்கும் வகையில் வாழ்ந்து காட்டினால், நம் நாட்டை சீக்கிரமே
வளர்ந்த நாடாக உருவாக்க முடியும்.

இதுதான் இளைய சமுதாயத்துக்கு நாம் உருவாக்கி வைக்கும் சொத்து.

இன்டர்நெட் தமிழ்: உலகில் உள்ள எல்லா மக்களிடமும் தொன்மையான தமிழ் சென்று
சேர வேண்டுமானால், "யுனிகோட்' (ன்ய்ண்Sரீர்க்ங்) மூலம் தமிழை
வரைமுறைப்படுத்தி, இன்டர்நெட் தமிழாக இதை உருவாக்க வேண்டும் என
முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

தமிழக முதல்வர் கருணாநிதியின் ஏற்புரை:

எனக்கு தொல்காப்பியர் விருது வழங்கிய குடியரசுத் தலைவருக்கு என்ன கைமாறு
செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை.

என்னையே தமிழுக்கும், தமிழக மக்களுக்கும், தமிழர்களின் நலனுக்கும் ஒப்படைத்துக்
கொண்டுள்ளேனே -அதில் இருந்து ஒரு துளியும் பின்வாங்க மாட்டேன் என்ற உறுதியை
உங்கள் முன்னால் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிக்கிறேன்.

இளவயதில் இருந்து கலை, இலக்கியத் துறையில் நான் ஈடுபாடு
கொண்டிருந்தாலும், அரசியலிலும் ஈடுபட்டுள்ளேன். பெரியாரின்
மாணவனாக, அண்ணாவின் தம்பியாக உங்களுக்கெல்லாம் உடன்பிறப்பாக நான் இருக்கி
றேன். இந்த நிலை என் வாழ்வின் இறுதிநாள் வரையிலும், அதன்பிறகும் தொடர
வேண்டும் என்பதுதான் நான் கொண்டுள்ள ஆசையாகும்.

வடமொழி நூல்கள்தான் முதன்மையானவை என சொல்லப்பட்ட காலத்தில் தமிழிலில்
உருவான இலக்கண நூல் தொல்காப்பியம். இதை எல்லோரும் படித்து உணரும் வகையி
ல் எளிமையானதாக ஆக்கும் முயற்சியில் நான் வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன்.

ஓரறிவு முதல், ஆறு அறிவு வரை வகைப்படுத்தி, உதாரணங்களையும் 3000
ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார் தொல்காப்பியர். அந்த வகையில் அறிவி
யல் கருத்துகளும் அதில் உள்ளன என்றார் அவர்.

அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி வாழ்த்து கூறி
னார்.

விருதை வழங்கிய ஆழ்வார்கள் ஆய்வு மையத்தின் தலைவர் இராம வீரப்பன் தலைமை
வகித்தார். 6 ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் கலாமுக்கு வழங்கிய ராமானுfர் வி
ருது அடுத்த ஆண்டில் இருந்து மீண்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவி
த்தார்.

இதுபோன்ற விருதுகள் வழங்க பெரியதொரு தொகையை வைப்பு நிதியாகச் செலுத்துவது
குறித்து தன் பிறந்த நாளான செப்.9-ல் அறிவிப்பு வெளியிட உள்ளதாக அவர் குறிப்பி
ட்டார்.

ஆய்வு மையத்தின் நிறுவனச் செயலர் சா. ¦fகத்ரட்சகன் வரவேற்றார். அவ்வை
நடராஜன் நன்றி கூறினார்.

said...

வணக்கத்துடன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//சி.வை. தாமோதரனார் அவர்களை கௌரவிப்பது என்பது இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்த வரலாற்று உண்மையை பதிவு செய்வதாகும்//
ஈழத்தவர்களின் அவாவும் அதுதான்.