March 05, 2006

திருக்குறள் விளையாட்டு

அன்றாட வாழ்க்கையில் திருக்குறளை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கு ஒரு விளையாட்டு. இது சிட்னியில் 1992 இல் நடந்த 5வது தமிழ்ப் பண்பாட்டு மாநாட்டில் இ.வி.சிங்கன் என்பவரால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. நீங்களும் விளையாடிப் பார்க்கலாமே.

தம்பி: அக்கா! உனக்குத் திருக்குறள் விளையாட்டு தெரியுமா?

அக்கா: குறள் விளையாட்டா?

தம்பி: தெரியுமா அக்கா! விளையாடுவோமா?

அக்கா: நான் தயார். ஆனால் உனக்குத் திருக்குறளில் இருக்கும் 133 அதிகாரங்களின் தலைப்புகளும் மனப்பாடமாகத் தெரியுமா?

தம்பி: எனக்கு அறத்துப்பாலில் இருக்கும் 38 அதிகாரத் தலைப்புகள் தெரியும்.

அக்கா: அந்த அதிகாரத் தலைப்புகளை வைத்தும் விளையாடலாம். ஆனால் பொருட்பாலும் இன்பத்துப்பாலும் தெரிந்தால் விளையாடுவது இன்னும் இன்பமாக இருக்கும்.

தம்பி: அவைகளைப் படிக்க வேண்டும். மிகவும் கடினமாக இருக்கிறதே!

அக்கா: அப்படிச் சொல்லாதே. படிப்பது கடினம் என்று சொன்னால், படிப்பது இன்னும் கடினமாகப் போய்விடும். படிக்க வேண்டும். படிப்பதைக் கவனமாகப் படிக்க வேண்டும். மனதை விட்டுப் போகாது. நான் ஒரு வழி சொல்கிறேன். அதைப் பின்பற்றிப் பார்.

தம்பி: சரி அக்கா! வழியைச் சொல் கேட்கிறேன்.

அக்கா: திருக்குறளில் 133 அதிகாரங்கள் இருக்கின்றன. இந்த 133 தலைப்புக்களையும் மனப்பாடம் செய்துகொள். 14 நாட்கள் போதும். நாளொன்றுக்குப் 10. அதைப் பாடம் பண்ணுவதற்கு, நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் போதுமானது.

தம்பி: நாள் 1-க்கு 10 நிமிடமென்றால் 14 நாட்களில் திருக்குறள் தலைப்புகள் அத்தனையும் மனப்பாடமாகி விடும் என்று சொல்கிறாயா?

அக்கா: அப்படித்தான்!

தம்பி: அக்கா, விளையாட்டைக் கொஞ்சம் சொல்லு பார்ப்போம்.

அக்கா: தலைப்புகள்: மனைவி, மக்கள், அன்பு, இன்சொல், அறிவு, அமைச்சு, நட்பு, குடி, சூது, பெரியாரைத் துணைக்கோடல், என்றெல்லாம் இருக்கிறது.

தம்பி: ஆமாம், இவைகள் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள தலைப்புகள்.

அக்கா: இப்போது உன் படிப்பைப் பற்றிக் கேட்க வேண்டுமென்றால்

மூத்தவர்: தம்பி நாற்பதில் எப்படி? (40இல் எப்படி என்றால் தம்பி படிக்கிறானா? என்று பொருள். 40ஆம் அதிகாரம் கல்வி)

இளையவர்: 40 அவனுக்கு உண்டு. நாற்பத்தியொன்று மாதிரித் தெரிகிறானே (41 கல்லாமை அதிகாரம்)

மூத்தவர்: அதுவா, அவனுக்கு 42 இல்லை. அதனாலேயே 41 மாதிரித் தெரிகிறது. (அதாவது, படித்திருக்கிறானா, ஞானமில்லை. அதனாலேயே படிக்காதது மாதிரித் தெரிகிறான்)

தம்பி: ஆமாம் அக்கா. நல்ல சுறுசுறுப்பை உண்டாக்குகிறது. 133 தலைப்புகளையும் அறிந்து கொண்டால் உலகத்திலே உள்ள எல்லா சங்கதிகளையும் அதில் வைத்துக் கொண்டே பேசி விடலாம் என்று ஓர் அறிஞர் கூறியிருக்கிறார். நாம் இதை நன்றாகப் படித்துவிட்டு இந்த விளையாட்டை மற்றவர்களும் அறிந்துகொள்ள ஓர் இயக்கம் அமைத்துப் பரப்ப வேண்டும்.

அக்கா: நல்ல யோசனைதான். அதை நடைமுறையில் செய். முதலில் நீ 133 அதிகாரங்களையும் மனப்பாடம் செய்.

தம்பி: ஆகட்டும் அக்கா, தங்கள் சித்தம் என் பாக்கியம்.

படித்ததில் பிடித்தது.

38 comments:

said...

Thanks Anony.

said...

nice game

said...

wow interesting game..adhoda..thirukkuraL muzhuama kattunda madiryium irukkum

said...

இப்படியும் ஒரு இலகுவான முறையிருக்கா? நல்ல யோசனை ; தொடரவும்; நானும் முயல்கிறேன்.
யோகன் பாரிஸ்

said...

சந்திரவதனா, அனிதா, உங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.

said...

சும்மா விளையாட்டுன்னு சொல்லிவிட்டு, பந்து பேட், ஸ்டம்பெல்லாம் குடுக்கவில்லையென்றால் எப்படிங்க ஆடுவது!

இந்தாங்க அதெல்லாம்!

இன்னிக்கு முதல் ஓவரை நான் போட்டு ஆரம்பிக்கிறேன்!

யாரும் அடுத்து போட வரவில்லையென்றால் தொடர்ந்து போட்டுக்கொண்டிருப்பேன்!

'போ'ன்னு சொல்றவரைக்கும்!

இந்த ஓவருக்கு 10 பந்துகள்!

<'b'>1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்.<'b'>

எங்கே! அடிச்சு ஆடுங்க பார்ப்போம்!

அவுட் ஆயிடாதீங்க!

நாளைக்கு அடுத்த ஓவர்!

Anonymous said...

படா சோக்காகீதுப்பா இந்த வெளாட்டு!
-அடுத்தாத்து அலமு

said...

யோகன் பாரிஸ்,

SK விளையாடக் கூப்பிட்டிருக்கிறார். அவரோட விளையாடிப் பாருங்களேன்.

அடுத்தாத்து அலமு, வெளாடிப் பாத்தேளா? அடுத்தாத்து சந்தோஷமாயிருந்தா நம்மாத்து சந்தோஷத்துக்குக் கேட்கவா வேணும்?

said...

யாரும் வரலை அடுத்த ஓவர் போடறதுக்கு! ?? :(

எனக்கு ஜாலி! :)

இதோ இரண்டாவது ஓவர்!

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

Anonymous said...

Thanks for your contribution to propagate our great Thirukkural. Please visit our site www.thirukkural2005.org to find the proceedings and articles of International Thirukkural Conference 2005 held in USA. Please keep it up the good work. Search thirukkural video at Google to see some of our events.

nanjil peter
Maryland

said...

SK,
//11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை //

ஒருவரும் வரமாட்டேன் என்கிறார்களே. எல்லோரும் 13 இல் இருக்கிறார்களோ:)) என்றாலும் உங்களுக்கு 24 கட்டாயம் கிடைக்கும். நன்றிகள். தொடர்ந்து விளையாடுங்கள்.

said...

நாஞ்சில் பீற்றர்,
தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். தங்கள் திருக்குறள் மாநாடு-2005 இணையத் தளத்துக்கு சென்று பார்த்தேன். தரமான மாநாடு ஒன்றை நடத்தியிருக்கிறீர்கள். உலகப் பொதுமறையைப் பரப்புவதற்கு நீங்கள் எடுத்துவரும் ஆக்கபூர்வமான முயற்சிகளுக்குப் பாராட்டுக்கள்.

said...

மூன்றாவது ஒவருக்குத் தயாகுங்கள் !

இன்னும் யாரும் அவுட் இல்லைன்னு அர்த்தம்!

என் பௌலிங் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்றும் கொள்ளலாம்!!:)

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

யாராவது ஒருத்தர் வந்து இந்த 30 பந்தையும் திரட்டி ஒரு பின்னூட்டமாப் போடுங்க பார்ப்போம்!

அப்படியே முடிந்தால், என் பதிவில் வாராவாரம் மயிலை மன்னார் என்னும் என் நண்பன் ஒரு அதிகாரத்துக்குப் பொருள் சொல்லுகிறான். அதையும் வந்து பாருங்கள்!

said...

கொஞ்சம் கோவம், கொஞ்சம் வருத்தம் வந்தது!
சரி, நமக்கென்ன, நம் பணியை நம் செய்து கொண்டு போகலாம் என வள்ளுவனைப் புரட்டினேன்!
ஐயன் அங்கு வந்து 31 - ம் அதிகாரத்தைக் காட்டி எனக்கு அறிவுறுத்தினான்!

இதோ நாலாவது ஓவர்!

ஆட விருப்பம் உள்ளவர்கள் வாங்க!

இல்லையென்றாலும், வெறும் ஸ்டம்ப்புகளை நோக்கி என் பந்துகள் வீசப்பட்டுக் கொண்டுதான் இருக்கும்!!

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

said...

நல்ல விளையாட்டுங்க இது.
வலைப்பதிவில் 24 கிடைக்கணும்னு,
27 பண்ணுறவங்களா நீங்க?

வாங்க வாங்க.

10, 20, 30 கடைப்பிடிச்சீங்கன்னா தானா எல்லாமே கை சேரும்.

இது விளையாட்டுக்கான ட்ரயலுங்க.
சரியா வருதான்னு பார்க்கலாம்

said...

1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

said...

24ல்லாம் வேணாங்க! 10 சொல்லலாமேன்னு பார்த்தேன்!

அதுக்குத்தான் 27 இருக்கேன்!

said...

வணக்கம் மதுமிதா, SK ஐயா 24க்கு அலையுறவரில்லை என்று ரொம்ப 13ஓட சொல்லியிருக்கிறார்::)
இங்கு வந்து SK ஐயாவுக்கு 10 கூறியமைக்கும், உற்சாகமூட்டியமைக்கு நன்றிகள். நான் இங்கு 12 தான்.

said...

அஞ்சாவது ஓவர்![ஐந்தாவது இல்லை! 31-ஆப் போடுவது! எல்லாம் 38 - ங்க!]

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

said...

இதோ ஓவர் எண் ஆறு! என்ன செய்வது? 60 இருக்கே இன்னமும்! 54 இன்னும் வரவில்லை!

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59. ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை

said...

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மேலேறி........ ஏaழாவது ஓவரை வீசினான்!

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

611இல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது!

612 செய்ய வேண்டாமே என்றுதான்!

said...

சிறீதரன்[கனக்ஸ்],
நல்ல விளையாட்டு மட்டுமல்ல, திருக்குறள் அதிகாரங்களை நினைவில் வைத்துக் கொள்ளவும் இப்படியான விளையாட்டு உதவும். எனக்கு திருக்குறள் அதிகார வரிசைகள் தெரியாது. எனவே எதற்கும் திருக்குறள் புத்தகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

said...

726 கேள்வி கேட்டு, 730 உணர்ந்ததும், எப்படி தொடர்ந்து போடாம இருக்கிறது?

முதல் ஏழு ஓவர்களுக்கு பேட் பண்ணாதவங்களும் இப்ப வந்து ஆடலாம்!

அவங்களுக்காக ஒரு ரீ-ப்ளே! அப்புறம் எட்டாவது புது ஓவர்!
இதை விட்டா அப்புறம் 14 - வது ஓவருக்கு முன்னாலதான் அடுத்த ரீ-ப்ளே!

//1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59.
ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை.

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.//

எட்டும் வரை எட்டும் எட்டாவது ஓவர்!

71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல்வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு. 80. நட்பாராய்தல்.

726 கேள்வி கேட்டு, 730 உணர்ந்ததும், எப்படி தொடர்ந்து போடாம இருக்கிறது?

said...

வாருங்கள் வெற்றி, தலைப்புகளை மட்டும் மனப்பாடம் செய்தால் போதும் SK ஐயாவோடு விளையாடுவதற்கு. உங்கள் 65ஐ எதிர்பார்க்கிறேன்.

SK, 60 ஓடு தொடர்ந்து விளையாட முன்வந்தமைக்கு வாழ்த்துக்கள்.

//726 கேள்வி கேட்டு, 730 உணர்ந்ததும், எப்படி தொடர்ந்து போடாம இருக்கிறது//

திருக்குறளில் 133 தலைப்புகள் தானே உண்டு! இந்த 726/730க்கு விளக்கம் தருவீர்களா? (எனக்கு 43 மட்டு மட்டு:))

said...

பந்து போடும் போது, 'நோ பால்', 'வைட், 'கூக்லி' எல்லாம் வரும்தானே!

ஒரே மாதிரியாகவா போடுவாங்க!?

133 தான் தலைப்புகள்.

ஆனால், குறள் 1330 ஆயிற்றே!

72-ல் 726, 730 எல்லாம் வரும், ஸ்பின், ஆஃப் ப்ரேக் மாதிரி!
:))

said...

"தனக்கு ஒரு துன்பம் வந்தா தெய்வத்துக்கிட்ட வேண்டுவோம்!

ஆனா, தெய்வத்துக்கே துன்பம் வந்தா எங்கே போறது?"

அப்படீனு தங்கப்பதக்கம் என்னும் சிவாஜி படத்தில் ஒரு புகழ் பெற்ற வசனம் வரும்!

அது போல,

"மத்தவங்க தூங்கினா பதிவாளர்கிட்ட போலாம்!ஆனா, பதிவாளரே தூங்கிவிட்டால், எங்கே போறது!?"

கனக்ஸ்,
நீங்க கேட்ட கேள்விக்கான என் பின்னூட்டமே இன்னும் பதிவிடவில்லை!

இருப்பினும்,
இதோ ஒன்பதாவது ஓவர்!

81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறந்தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை.

said...

பத்தாவது ஓவர்!

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.

said...

SK, 10 ஓவர்கள் வெற்றிகரமாக முடித்தமைக்குப் பாராட்டுக்கள். உங்கள் ஓவர்கள் முழுவதுமாக முடிந்ததும் மற்றவர்கள் விளையாட வருவார்கள் என எதிர்பார்க்கலாம்:)

said...

பத்து ஓவர்கள் வீசியும், வேகம் குறையாமல், இன்னும் மீதமுள்ள நான்கு ஓவர்களையும் தானே வீசி இந்த ஆட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணி, இதோ, தனது பதினொன்றாவது ஓவரை வீச "பொருட்பால்" முனையில் இருந்து, பந்து வீச்சாளர் வருகிறார்!

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,

இனி, "இன்பத்துப்பால்" முனையில் இருந்து மீதி பந்துகள் வீசப்படும்!

109. தகையணங்குறுதல், 110. குறிப்பறிதல்.

said...

பந்தை அடிக்க ஆளில்லாமல் இருந்தாலும் விடாமல் வீசும் எஸ்.கே., நீங்கள் எங்கே.

ஆனால் மட்டையுடன் எதிர்கொள்ள ஆளிருந்தும் பந்து வீச மறுத்த பாகிஸ்தான் டீம் எங்கே.

எந்த அம்பையர்யிடமிருந்தும் தொந்தரவு வராமல் உங்கள் பந்து வீச்சு வளம் பெற வாழ்த்துக்கள் எஸ்.கே.

வாழ்க நீ எம்மான்!

said...

அடிக்கறதுக்கே ஆளைக் காணும் என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறேன்!

இதில் அம்பயர் பற்றிக் கவலைப் படாதே எனச் சொல்லும் உங்களை......!

ஏதோ ஆட்டத்தைப் பார்க்க நீங்களாவது வந்தீர்களே, கொத்தனாரே!

புது மாதிரி சிந்தனையை அள்ளித் தெளித்ததற்கு....

மிக்க நன்றி!

said...

110ஓடு வந்து பின்னூட்டமிட்ட இலவசக்கொத்தனாருக்கு நன்றி.

said...

சும்மாவே பத்து ஓவர் வீசியாச்சு!

இப்ப ஒரு பார்வையாளர் வேற [இலவச கொத்தனார்] வந்தாச்சு!
இனி என்ன!
மீதி 3 ஓவரையும் வீசிற வேண்டியதுதான்!
பன்னிரண்டாவது ஓவர் இதோ!

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி.

said...

//இப்ப ஒரு பார்வையாளர் வேற [இலவச கொத்தனார்] வந்தாச்சு!//
SK ஐயா, உங்களின் ஆட்டத்துக்கு முன்னால் ஒருவரும் நிண்டுபிடிக்கிறார்கள் இல்லை. வந்த வேகத்தில் அவுட் ஆகிறார்கள்:)) தொடர்ந்து ஆடுங்கள். உங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது.

said...

புது மாதிரியான ஆட்டம்!
ஒரே ஒரு பௌலர்!
பேட்ஸ்மன் கிடையாது!
ஃபீல்டெர்ஸ் கிடையாது!
அம்பையர் கிடையாது!
ஒரே ஒரு பார்வையாளர்!

ஒரு பரிசு காத்திருக்கிறது!

ஆட்ட நாயகன் விருது எனக்கே!!

இதோ ஆவேசத்துடன் பதின்மூன்றாம் ஓவர்! [122!!]

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்பு நலன் அழிதல் என்று போட்டால், அர்த்தம் அனர்த்தமாகி விடும்! ஐயன் வாழ்க!] 125. நெஞ்சொடு கிளைத்தல், 126. நிறையழிதல், 127. அவர்வயின் விதும்பல், 128. குறிப்பறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல்.

said...

ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாராகிக் கொண்டிருக்கிறார்!
இதோ முதல் பந்து!
சற்று அளவு குறைந்த பந்து!
131. புலவி
இதையும் அடிக்க ஆளில்லை!

அடுத்த பந்து! சற்றே வேகமான பந்து!
132. புலவி நுணுக்கம்.
ம்ஹூம்! இதுவும் அப்படியே!

அடுத்த பந்து!
133. ஊடலுவகை.
சுழல் பந்தான இது விக்கெட்டின் மேல் படுகிறது!
விக்கெட் கீழே விழுகிறது!

மகிழ்ச்சியால் 'ஹௌஈஸ்ஸட்' எனக் கூவுகிறார் பந்து வீச்சாளர்!

ஆனல், அம்பையர் இருந்தால் தானே அவுட் கொடுப்பதற்கு!

மறுபடியும் பந்து வீசத் தயாராகும்போது....
ஆ! இதென்ன! ஆட்டம் முடிந்து விட்டதாக ஒரு அறிவிப்பு!

பந்தையும், வீழ்த்திய விக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு, தனி ஆளாக வீரநடை போட்டு பெவிலியன் நோக்கித் திரும்பி நடக்கிறார் பந்து வீச்சாளர்!

இவ்வாட்டத்தை இதுவரை திறம்பட நடத்திய ஸ்ரீதரனுக்கும், கடைசி பார்வையாளராக வந்த கொத்தனாருக்கும் நன்றி!

இந்த வரலாற்றுப் புகழ் படைத்த ஆட்டத்தை இதுவரை காணாத அனைவருக்கும் இதோ ஆட்டத்தின் ஒரு குறுகிய 'ரீ-ப்ளே!'

1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59.
ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை.

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.//

71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல்வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு. 80. நட்பாராய்தல்.

81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறந்தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை.

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,

இனி, "இன்பத்துப்பால்" முனையில் இருந்து மீதி பந்துகள் வீசப்படும்!

109. தகையணங்குறுதல், 110. குறிப்பறிதல்.

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி.

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்பு நலன் அழிதல் என்று போட்டால், அர்த்தம் அனர்த்தமாகி விடும்! ஐயன் வாழ்க!] 125. நெஞ்சொடு கிளைத்தல், 126. நிறையழிதல், 127. அவர்வயின் விதும்பல், 128. குறிப்பறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல்.

131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடலுவகை.

****இந்த ஆட்டத்தால் என்ன பயன் எனக் கேட்பவருக்கு ஒரு வார்த்தை!

உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!
உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!
இன்றில்லாவிடினும் நாளை நிச்சயம் உங்களைப் போற்றுவார்கள் இதற்காக!
தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நீங்கள் செய்யும் சிறு தொண்டாக இது இருந்து விட்டுப் போகட்டும்!

நன்றி!****

said...

ஆட்டம் என்னன்னே தெரியாம முழு ஆட்டமும் பார்த்தாச்சு!

Anonymous said...

SK, உங்கள் ஓவர்களை முழுவதுமாக வெற்றிகரமாக ஆடிமுடித்தமைக்கு பாராட்டுக்கள். இப்பொழுது முழு ஓவர்களும் (அதிகாரங்களும்) தெரிந்தநிலையில் இனி வருபவர்கள் யாராவது ஆடவர(ல்)லாம் ஆடவரலாம்.
//உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!
உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!
இன்றில்லாவிடினும் நாளை நிச்சயம் உங்களைப் போற்றுவார்கள் இதற்காக!
தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நீங்கள் செய்யும் சிறு தொண்டாக இது இருந்து விட்டுப் போகட்டும்!//
அதுவே எனது எதிர்பார்ப்பும். வணக்கம்.