ஈழத்து மகாகவி அமரர் உருத்திரமூர்த்தி அவர்களின் குறும்பாக்கள் நான்கினை ஈழநாதன் தனது வலைப்பதிவில் இட்டிருந்தார். மகாகவியின் மறக்கமுடியாத மேலும் நான்கு குறும்பாக்களை இங்கு பதிவிலிடுகின்றேன்:
செல்லம்மா சேலை
நல்லையர் நெக்குருகி நைந்தார்
நம் பெருமான் "வா" என்று வந்தார்
நேரே போய்த் தம் மனைவி
செல்லம்மா சேலையுள் மறைந்தார்.
(பின்னூட்டல் பார்க்க)
சித்தன்
தென்னை மரம் ஏறுகிறான் சித்தன்
என்ன கண்டான் அவ்வழகுப் பித்தன்
தன்னுடையை மாற்றுகிறாள்
கிணற்றடியில் தங்கம்மாள்!
இன்னுமிறங்கானாம் அவ்வெத்தன்.
அத்தி
அத்திக்குத் தூது சென்றாள் உத்தி
முத்து இவளைக் கைப்பற்றி
முத்தி முத்தி மகிழ்ந்தான்!
மெத்தத் தித்தித்த துத்திக்கு அவ்
அத்தி செத்தாள் கத்திக் கத்தி.
வடைக்குள் வண்டு
வண்டு வடைக்குள் இருந்து மேலே
வந்தது. நான் பிய்த்தபடியாலே!
கண்டொரு சொல் பேசாமல்
காற்றில் அது போயினது
நன்றி சொல்லா தெம்மவரைப் போல.
Technorati Tags: Tamil தமிழ்ப்பதிவுகள் தமிழ்
December 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)
8 comments:
முதலாவது குறும்பாவை ஒருக்காப் பாருங்கோ.
ஒண்டு குறையிற மாதிரிக் கிடக்கு.
கொழுவி, பாடலின் முதல் வரி குறைவது மாதிரித் தான் தெரியுது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். திருத்துகிறேன். அல்லது யாராவது தெரிந்தவர்கள் வந்து திருத்துங்கள். ஈழநாதனுக்குத் தெரிந்திருக்கும்.
நல்லையர் நெக்குருகி நைந்தார்.
நம்பெருமான், "வா!" என்று வந்தார்.
"நில்லையா!" என்றடியார்
நேரேபோய்த் தம் மனைவி
செல்லம்மாள் சேலையுள் ம றைந்தார்.
மதி, திருத்தத்திற்கு நன்றி.
இப்படித்தான் பழம் பெருமையோடு பேசிப்பேசிக் காலத்தை ஓட்டிய கூட்டம் நிகழ்காலத்தை மறந்து போனது!அந்தக் காலத்தைக் கையிலெடுத்த மேற்குலகார் நம்மை மேய்த்துவிட வழியொன்று கண்டார்.உருப்படியற்ற கவிதைகளெல்லாம் ஊருக்கு என்ன செய்யும்?போய் வேலையைப் பாருங்கப்பா!உருத்திரமூர்த்தி,ஈழத்து மகாகவி...வெங்காயம்.உருப்படாத எழுத்துகளுக்கு உருப்படா கூட்டம்வேற கருத்துகளோடு அலைகிறது.
சிறிதரன்,
நீர் கொம்யூனிம், இடதுசாரியம், வர்க்க விடுதலை, பூர்சுவா, தரகுமுதலாளி, ஏகாதிபத்தியம், பாசிசம், தேசியம், புரட்சி, பாட்டாளி, கால்மார்க்ஸ், லெனின், ஏங்கெல்ஸ்
எண்டு சொல்லுகள் வாற குறும்பாக்களையெல்லோ தேடியெடுத்துப் போட்டிருக்க வேணும்.
உருப்படியான எழுத்துக்கள் எண்டா கட்டாயம் நான் மேற்சொன்ன சொல்லுகள் வரவேணும். மொத்த ஆக்கத்தின்ர கால்வாசிப் பகுதியையாவது மேற்கண்ட சொற்களைக் கொண்டே நிரப்பியிருக்க வேணும்.
எண்டாலும் ஊருக்கு நல்லது செய்யிற, ஊரை உருப்படியாக்கக் கடுமையாக உழைக்கிற கதிர் போன்ற ஆக்களை இங்க வந்து பின்னூட்டம்போட்டு அவையின்ர நேரத்தை வீணடிச்சதுக்காக நீர் வருந்தத்தான் போகிறீர்.
bharathiyar engal oorin marumagan..avarai parri thrindhavargalidamirundhu thagavalgal thiratti varugiranbe..seekirame adhai vaithu oru periya padhviu poduvane..bharathi paariya thagavalgalukku nandri
கார்த்திக் பிரபு எழுதியது:
//பாரதியார் எங்கள் ஊரின் மருமகன். அவரை பற்றி தெரிந்தவர்களிடமிருந்து தகவல்கள் திரட்டி வருகிறேன். சீக்கிரமே அதை வைத்து ஒரு பெரிய பதிவு போடுவேன். பாரதி பற்றிய தகவல்களுக்கு நன்றி//
நீங்கள் எந்தப் பதிவு பற்றிக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. இந்தப் பதிவில் எமது ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தி பற்றி எழுதியிருக்கிறேன். எனது மற்றைய பதிவுகள் இரண்டில் மகாகவி (பாரதி) பற்றி எழுதியுள்ளேன். வருகைக்கு நன்றி. உங்கள் பாரதி பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
Post a Comment