May 29, 2006

கன்பராவில் ஈழத்தமிழர் உரிமைக்குரல்

இலங்கையின் வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தமிழ்மக்கள் படுகொலைகளை கண்டித்தும் தொடரும் இந்த வன்முறைப்படலத்துக்கு சர்வதேச சமூகம் நியாயமான அக்கறையை காண்பித்து ஸ்ரீலங்கா அரசைக் கண்டிக்கவேண்டும் என்று கோரியும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ்மக்கள் சர்வதேச சமூகத்தை வலியுறுத்தி ஒன்றுபட்ட எழுச்சி ஒன்றுகூடல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் பேரெழுச்சியுடன் நடைபெற்றது. கன்பரா, சிட்னி, மெல்பேர்ன், பிறிஸ்பேன் ஆகிய மாநிலத் தலைநகரங்களிலிருந்து ஆயிரத்து ஐநூறுக்குக்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கன்பராவில் கூடினர்.




ஓன்று கூடலில் கலந்துகெண்ட அனைவரது கைகளிலும் தமிழ்மக்களின் அல்லலை எடுத்துரைக்கும் பதாகைகள் காணப்பட்டன. அங்கு ஒலிக்கப்பட்ட சுலோகங்கள்:

Australia - Help the Tamils

World Comdemn - Sri Lanka's ethnic cleansing of Tamils

International Community - Stop your deafening silence

Sri Lanka's killing of Tamil babies - How is it a step to Peace?

Tamils want - Peace with Justice

இந்நிகழ்வில் சிறீலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் உறவினரும் ஈழத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்துக்கு அன்று தொட்டு தீவிர ஆதரவுப்பணி புரிந்து வரும் மருத்துவ கலாநிதி பிறயன் செனிவிரட்ன, அவுஸ்திரேலிய நாடாளுமன்றின் லிபரல், தொழில், மற்றும் பசுமைக் கட்சிகளைச் சேர்ந்த சில உறப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.


Free Image Hosting at www.ImageShack.us

May 13, 2006

தாய் செய்த நன்றி

தாய் செய்த நன்றி

ன் மிருதுவாகிய முலையினால் உனக்குப் பால் ஊட்டி, தன் கைகளிலே நீ நித்திரை செய்யும்படி உன் கன்னத்தில் இனிமையாகிய முத்தம் கொடுத்தவள் எவள்? -என் தாய். நித்திரை உன் கண்ணை விட்டு நீங்கின பொழுது, நீ உறக்கம் கொள்ளும்படி இனிமையான கீதங்களைப் பாடி நீ அழாதபடிக்குத் தாலாட்டினவள் எவள்? -என் நற்றாய். நீ தொட்டிலில் நித்திரை செய்யும்பொழுது தொட்டிலை ஆட்டிக்கொண்டு, உன்னுடன் கூட இருந்து, உன்னைச் சாவதானமாகக் காப்பாற்றி, உனக்காக அன்பின் கண்ணீர் விட்டவள் எவள்? -என் அன்னை. நீ வியாதியினாலும் துன்பத்தினாலும் அழுதபொழுது, துக்கக் குறியையுடைய உன் கண்ணைப் பார்த்து, நீ இறந்து போவாயோ என்று பயந்து அழுதவள் எவள்? -என் மாதா. நீ விழுந்த பொழுது, உனக்கு உதவி செய்யும்படி ஓடிவந்து, இனிமையான கதைகளைச் சொல்லி, உன் காயத்தைச் சவுக்கியப் படுத்த உனக்கு முத்தம் கொடுத்தவள் எவள்? -என் அருமைத்தாய். நீ பாவஞ் செய்யாமல் விலகும் பொருட்டும், புண்ணியத்தைச் செய்யும் பொருட்டும், கடவுளிடத்தே அன்பு வைத்து அவரை எந்நாளும் வழிபடும் பொருட்டும், உனக்குப் போதித்தவள் எவள்? -என்னைப் பெற்ற தாய். இப்படியே உன்னிடத்தில் இவ்வளவு அதிக அன்புள்ளவளாய் இருக்கின்ற உன் மாதாவிடத்தினிலே நீ எப்பொழுதாவது அன்பில்லாதவனாய் நடக்கலாமா? -நடக்கலாகாது. பிள்ளையே, நீ கடவுளுடைய திருவருளினாலே சீவனோடிருக்கும் வரையும், உன் அன்புள்ள மாதா உனக்காகப்பட்ட பிரயாசத்துக்கு நீ பிரதிபலன் அளிக்கும்படி விரும்பிக் காத்திருக்க வேண்டும். அருளியவர்: ஆறுமுக நாவலர் நாளை அன்னையர் தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி இந்தக் கட்டுரை பதியப்படுகிறது.