க.
குமாரசாமி முதலியார்
(1791 – 1874)
ஆக்கியோன் திரு. மு. இராமலிங்கம்
குமாரசாமி முதலியார் 1791 ம் ஆண்டளவில் நிகழ்ந்த பரிதாபி வருடம்
ஆவணிமாசம் 11 ம் திகதி வடமராச்சிப் பகுதியிலுள்ள உடுப்பிட்டி
நத்தங்களுளொன்றாகிய வல்லிபட்டியென்னும் சிற்றூரில் அவதரித்தார். இவர் காலஞ்சென்ற நீதிபதி உவைமன் கதிரவேற்பிள்ளைக்குத் தந்தையார்.
கவிவன்மையிலும் கல்வித் திறமையிலும் புகழ்
பெற்றுப் பல்லாண்டு நிலைத்துவரும் கனர் தனங் காத்திரங்கொண்ட பழம்குடியில் அவதரித்த
இம்முதலியாரின் தந்தையார் கதிர்காமபூப முதலியார் ஆவர். அன்னையார் வள்ளியம்மை
என்பவராவர். கீர்த்திவாய்ந்த புலவசிகாமணியும் 'பரந்தர நாடகம்' என்னும் நூலின் ஆக்கியோனுமாய் விளங்கிய குமாரசாமிப் புலவர் அவர்கள்
இவ்வள்ளியமையாரின் இருசகோதரருள் ஒருவராவர். கற்றோர் ஏத்துங்
கல்விக்களஞ்சியமாய்ச் சிறு சிறு பாக்கள் யாத்துப் பண்புபெற்ற முத்துக்குமாரு
முதலியாரவர்கள் இவ்வள்ளியம்மையாரின் மற்றச்சகோதரராவர். அக்காலத்திற்
சிறந்த கல்விமானாக விளங்கி ‘விறலி விடு தூது’ என்னும் நூலை முதனூலாகக் கொண்டு இளைஞர்களியற்றும் அநேக பிழைகளை விளக்கிக்
கற்போர் மனதைப் பிணிக்குந் தகையவாய், இலக்கண நூலுக்கமைய ‘நொண்டிப் பாடல்’ என்னும் நூலை இயற்றியவர் இவ்வள்ளியம்மையாரின்
தந்தையாரான சந்திரசேகர முதலியார் அவர்களே. இவர், ஒல்லாந்தர் அரசாட்சியின் கீழ் வன்னியர்களின் வாழ்விலும்
தாழ்விலும் ஈடுபட்டுப் பெரும் புகழுடன் தமது 96 ம் வயதில்
மண்ணுலகு நீத்தனர். அக்காலத்தில் இலங்கையையடைந்த இந்தியப் புலவசிகாமணியொருவர் சந்திரசேகர
முதலியார் அவர்களின் குடும்ப சரிதையை விளக்கி ஓர் சிறந்த குறவஞ்சிபாடி அவர்க்கு
அர்ப்பணஞ் செய்தவர். அக்குறவஞ்சியின் ஒரு பகுதியை ஈண்டுத்தருகிறோம்:
“மாசரி போலே யொடுங்கியா சடியருண்ணடங்குமாறு,
கண்டமைப்பித்தான் வீறுகொண்ட சிங்கமெனு நாகரிகக் குரிசில் சந்திரசேகர
மன்மதனனல்லகுல வளமைதனைச் சொல்லக்கேளம்மே.”
குமாரசாமி
முதலியார் ஐயாட்டைப் பிராயத்தில் வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றுத் தமது
மாமனார் முத்துக்குமாரு முதலியாரிடத்துச்சங்கீதம் முதலியன பயின்று இலக்கண
இலக்கியத்தில் அதி சாமர்த்திய முடையராய்ப் பன்னீராட்டைப் பிராயத்திற்றானே
செய்யுட்களை விரைவிலிபற்றுஞ் சக்தி பெற்றிருந்தார். கம்பராமாயணத்திற்கு அர்த்தம்
பண்ணுவதில் அதிவல்லப முடையரென்று எவர்களாலும் மதிக்கப்பட்டார். அவ்விராமாயணச்
செய்யுளொன்றில் “மசரதம்'' என்ற
தொடர்க்குப் பொருள் தெரியாது முட்டுற்ற அக்காலத்து ஏனைப்புலவர்க ளெல்லாம் விதியிலா
விகாரங்களுளொன்றாகிய எழுத்து நிலை மாறுதலின் படி தகரத்தை நிலை மாற்றி “மதசரம்” என்று வைத்துப் பொருள் கூறிப் பலராலும்
புகழப்பட்டார். இவர் பல காலம் பல நன்மாணாக்கர்க்குக் கேடில் விழுச் செல்வமாகிய
கல்விப் பொருளைக் கற்பித்து அவ்வழியாலும் பரோபகாரங் கருதி நடத்திய வித்தியா தர்ப்பணமெனும்
பெரிய பத்திரிகையிலே பெரும்பாலும் கல்வியைக் குறித்துச் செய்யுணடையாகப் பல வெழுதி
இவ்வழியாலுங் கல்வியை எங்கும் பிரபல்லியமாக்கி வந்தார்.
இவர்
சிறந்த ஒழுக்கமும் பெரும் பணமும் அதிகாரமும் படைத்திருந்தபடியினால் வரையாது
கொடுத்தும் பற்பல உதவி புரிந்தும் தந்தேசமக்களின் அன்பிற்கும் கெளரவத்திற்கும்
பாத்திரரானார், செந்தமிழ்க் கல்வியின் வளர்ச்சியை
நாடித் தமது சொந்தச் செலவில் உயர்தரக்கலாசாலை யொன்று ஸ்தாபித்தார். வல்லிபட்டியில அமெரிக்க மிஷனரி மாரின் சுகஸ்தலமாய் விளங்கும்
"ஊரிக்காடு'' என்னும் ஆதனத்தை அமெரிக்க
மிஷன் சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தனர்.
இவர் புண்ணிய மணியம் அவர்களின்
புத்திரியாகிய சிவகாமிப்பிள்ளையை மணந்து இரு ஆண் மகவையீன்றனர். அப்பிள்ளைகளுள் ஒருவர் யாழ்ப்பாணம் 'பிஸ்கால்' (Fiscal) உத்தியோகஸ்தராக விளங்கி 1884
ம் ஆண்டில் விண்ணுலகடைந்த சபாபதி முதலியாராவர், மற்றவர் ஆசிரியனாயும், அத்துவக்காத்தாயும், பொலீஸ்
நீதவானாயும், பல நூல்களின் ஆக்கியோனாயும், நுண்ணறிவு மிகுந்தவராயும் விளங்கிய உவைமன் கதிரவேற்பிள்ளை என்பவராவர்.
சிவகாமிப்பிள்ளை தமது கணவன் இறந்துவிட அக்காலந்தொடங்கி 27 வருடங்களாகத் தமது மகனாகிய கதிரவேற்பிள்ளையுடனேயே வசித்துவந்தார்
இவர்
செய்த செய்யுட்களோ
மிகப்பல, பொன்னை அரித்தரித்துத் தேடினாற்போலத் தேடியெடுத்தவைகள்
''குமாரசுவாமி முதலியார் கவித்திரட்டு' என்னும் பெயருடன் உடுப்பிட்டி வாசராகும் திரு.
சி. ஆறுமுகம்பிள்ளையால் 1887 ம் ஆண்டு அச்சிட்டு
வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றுள் குமாரசுவாமி
முதலியாரின் மனைவியாரது பிணியை மாற்றிப் புகழ்படைத்த இருபாலைச்
செட்டியாரைப்
புகழ்ந்தும், தம் புதல்வர் ஒருவர்க்கு விருந்தூட்டிய சுப்பிரமணிய
ஐயரென்பார்
ஒருவரை வியந்தும், அம்மாள்
என்னும் ஒரு
தேவதாசியின சங்கீதத்தை சுயந்தும் இவரது வளவொன்றை ஊடறுத்துப்போகத் தெருவெடுத்த
"ஒவசியர்”' ஒருவரைக் கடிந்து அது செவ்விதாதல்
வேண்டுமென அறிவித்தற்கு:
காலாயுசக் கதலிக்கந்தவேல் வைகு
நல்லை
வேலாயுத
முதலி மெய்யறிஞன் - பாலா நீ
சம்பந்தப்பிள்ளை
பொறாற்றாம்பி
சமபி நல்வழிக்குச்
சம்பந்தமாதறலை"
எனவும் வேறு
பல தனிப் பாக்களும் பாடியுளார்.
இருபாலைச் சேனாதிராய முதலியார் இறந்த சமாசாரங்
காதில் விழ:
நானாதிராவிடமு நன்னிலக்கணா ரறுச்செய்
சேனாதிராயனையோ செத்த்தென்றீர் – வானாதி
பொன்னிலத்தமுண்மை புகனூலுரைப்பதற்தற்காய்
இந்நிலத்து விட்டெடுத்ததே "
எனப்பாடினர்.
யாழ்ப்பாணம்
வண்ணார்பண்ணையில்
வசித்த சரவணமுத்துப்
புலவரைக் காணவிரும்பி
அவருக்கு ஓர்
விருத்தத்திலே திருமுகம் வரைந்தனர், அமெரிக்க மிஷன வைத்தியராய் அட்டதிக்கெங்கும் புகழ் ஒளிவிட்டு விளங்கிய கிறீன் (Dr. S.
F. Green) துரையைப்
புகழ்ந்தும் சனங்களின் உள்ளங்களோடு உயிரைக் கொள்ளை கொண்ட கொள்ளை நோய் காலத்திற்
பரிந்தும் பாடிய பதங்கள் பல உதயதாரகைப் பத்திரிகையிலே பரந்து கிடக்கின்றன.
தனிப்பாடல்கள் அன்றி நோய்க் கிரங்கல் முதலிய சில நூல்களும் செய்தனர்.
இவரும்
அருளம்பல முதலியாரும் ''தஞ்சைவாணன் கோவை'' வாசித்துப் பொழுது போக்கியிருந்த ஒரு நாள் அருளம்பல
முதலியார்: “இந்நூலையொப்ப இச்காலத்தார்க்குஞ் செய்ய வியலுமா?” எனக்கூறினர். குமாரசாமி முதலியாரால் இயலுமென்பதை
அடுத்தநாளில் அருளம்பல முதலியாரையே பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஒரு கோவை செய்ய ஆரம்பித்து
100 செய்யுட்களைச் செய்து காட்டினார். அருளப்பபலக்
கோவையில் ஒரு பாட்டை ஈண்டுக் குறிக்கிறோம்,
திங்காளுட
லக்கந்தேய்வறமாய்வறச்
சித்திரைபோற்
றங்காமலந்தர
மார்க்கந் தவம்
புரிந்தாலுந் தமிழ்
மங்காதுடுவை வருமருளம் பல மன்ன்ன்வரைக்
கொங்கர்
குழலிமுகம் போன்மென நினைக் கூற ரிதே.
பன்னாட்களாகத்தம தூரவர்களும்
பிறரும் வந்து தமக்கு ஓர் புதிய நாடகம் பாடித் தரும்படி கேட்கச் சொற்சுவை பொருட்சுவை
நிறைந்த இந்திர குமார நாடகத்தைப் பாடிக் கொடுத்தார். அந்நாடகத்திற்
சுபத்திரை சொல் தேவாரத்தை ஈண்டுக்குறிக்கிறோம்.
நீல மார் களத்தாய் பத்தி
நெறியனாருளத்தாய்
சத்திவேவற்றந்
தாய் செந்தாய்
வெள்
விடை யகந்தாயைந்தாய்
பாலநேரத்திரத்தாய் சோதி
பஞ்சவத்திரத்தாய் மேதிக்
காலனையுதைத்தாய்
நீதிக்கருணை மாகடலேபோற்றி.
பிறர் வேண்டுகோளின்படி தீருவிற்
சுப்பிரமணியர் பதிகம், மூளாய் சித்திவிநாயகர்பேரில் ஊஞ்சல், மங்களம், சட்டியம், பராக்கு, கும்மி முதலியவைகளும் கோப்பாய் ஊஞ்சல், பெரியம்மன் பதிகமும் ஊஞ்சலும், பன்னிருமாதப் பெயரையும் முதல் நான்கு செய்யுண் முதலடிகளிலே யமைத்து எட்டு
நல்லைக்
கலித்துறைகளும், கந்தவன நாதரூஞ்சலும் சில
கிறீஸ்தவர்கள் வேண்டுகோளின்படி, கிறீஸ்தமத கீர்த்தனங்களும்
பாடியுள்ளார்.
இவர் 1874 ம் ஆண்டு மார்கழித் திங்கள் 30ம் திகதி 83 ம் வயதினில் இப்பூவுலக வாழ்வை நீத்து விண்ணுல கேகினர்.
மூலம்: Jaffna College Miscellany (December 1936)