September 21, 2018

க. குமாரசாமி முதலியார் (1791–1874)


. குமாரசாமி முதலியார்
(1791 – 1874)

ஆக்கியோன் திரு. மு. இராமலிங்கம்

குமாரசாமி முதலியார் 1791 ம் ஆண்டளவில் நிகழ்ந்த பரிதாபி வருடம் ஆவணிமாசம் 11 ம் திகதி வடமராச்சிப் பகுதியிலுள்ள உடுப்பிட்டி நத்தங்களுளொன்றாகிய வல்லிபட்டியென்னும் சிற்றூரில் அவதரித்தார். இவர் காலஞ்சென்ற நீதிபதி உவைமன் கதிரவேற்பிள்ளைக்குத் தந்தையார். கவிவன்மையிலும் கல்வித் திறமையிலும்  புகழ் பெற்றுப் பல்லாண்டு நிலைத்துவரும் கனர் தனங் காத்திரங்கொண்ட பழம்குடியில் அவதரித்த இம்முதலியாரின் தந்தையார் கதிர்காமபூப முதலியார் ஆவர். அன்னையார் வள்ளியம்மை என்பவராவர்.  கீர்த்திவாய்ந்த புலவசிகாமணியும் 'பரந்தர நாடகம்' என்னும் நூலின் ஆக்கியோனுமாய்  விளங்கிய குமாரசாமிப் புலவர் அவர்கள் இவ்வள்ளியமையாரின் இருசகோதரருள் ஒருவராவர். கற்றோர் ஏத்துங் கல்விக்களஞ்சியமாய்ச் சிறு சிறு பாக்கள் யாத்துப் பண்புபெற்ற முத்துக்குமாரு முதலியாரவர்கள் இவ்வள்ளியம்மையாரின் மற்றச்சகோதரராவர். அக்காலத்திற் சிறந்த கல்விமானாக விளங்கி விறலி விடு தூது என்னும் நூலை முதனூலாகக் கொண்டு இளைஞர்களியற்றும் அநேக பிழைகளை விளக்கிக் கற்போர் மனதைப் பிணிக்குந் தகையவாய், இலக்கண நூலுக்கமைய நொண்டிப் பாடல் என்னும் நூலை இயற்றியவர் இவ்வள்ளியம்மையாரின் தந்தையாரான சந்திரசேகர முதலியார் அவர்களே. இவர், ஒல்லாந்தர்  அரசாட்சியின் கீழ் வன்னியர்களின் வாழ்விலும் தாழ்விலும் ஈடுபட்டுப் பெரும் புகழுடன் தமது 96 ம் வயதில் மண்ணுலகு நீத்தனர். அக்காலத்தில் இலங்கையையடைந்த இந்தியப் புலவசிகாமணியொருவர் சந்திரசேகர முதலியார் அவர்களின் குடும்ப சரிதையை விளக்கி ஓர் சிறந்த குறவஞ்சிபாடி அவர்க்கு அர்ப்பணஞ் செய்தவர். அக்குறவஞ்சியின் ஒரு பகுதியை ஈண்டுத்தருகிறோம்:

மாசரி போலே யொடுங்கியா சடியருண்ணடங்குமாறு, கண்டமைப்பித்தான் வீறுகொண்ட சிங்கமெனு நாகரிகக் குரிசில் சந்திரசேகர மன்மதனனல்லகுல வளமைதனைச் சொல்லக்கேளம்மே.

குமாரசாமி முதலியார் ஐயாட்டைப் பிராயத்தில் வித்தியாரம்பம் செய்விக்கப் பெற்றுத் தமது மாமனார் முத்துக்குமாரு முதலியாரிடத்துச்சங்கீதம் முதலியன பயின்று இலக்கண இலக்கியத்தில் அதி சாமர்த்திய முடையராய்ப் பன்னீராட்டைப் பிராயத்திற்றானே செய்யுட்களை விரைவிலிபற்றுஞ் சக்தி பெற்றிருந்தார். கம்பராமாயணத்திற்கு அர்த்தம் பண்ணுவதில் அதிவல்லப முடையரென்று எவர்களாலும் மதிக்கப்பட்டார். அவ்விராமாயணச் செய்யுளொன்றில்மசரதம்'' என்ற தொடர்க்குப் பொருள் தெரியாது முட்டுற்ற அக்காலத்து ஏனைப்புலவர்க ளெல்லாம் விதியிலா விகாரங்களுளொன்றாகிய எழுத்து நிலை மாறுதலின் படி தகரத்தை நிலை மாற்றிமதசரம்என்று வைத்துப் பொருள் கூறிப் பலராலும் புகழப்பட்டார். இவர் பல காலம் பல நன்மாணாக்கர்க்குக் கேடில் விழுச் செல்வமாகிய கல்விப் பொருளைக் கற்பித்து அவ்வழியாலும் பரோபகாரங் கருதி நடத்திய வித்தியா தர்ப்பணமெனும் பெரிய பத்திரிகையிலே பெரும்பாலும் கல்வியைக் குறித்துச் செய்யுணடையாகப் பல வெழுதி இவ்வழியாலுங் கல்வியை எங்கும் பிரபல்லியமாக்கி வந்தார்.

இவர் சிறந்த ஒழுக்கமும் பெரும் பணமும் அதிகாரமும் படைத்திருந்தபடியினால் வரையாது கொடுத்தும் பற்பல உதவி புரிந்தும் தந்தேசமக்களின் அன்பிற்கும் கெளரவத்திற்கும் பாத்திரரானார், செந்தமிழ்க் கல்வியின் வளர்ச்சியை நாடித் தமது சொந்தச் செலவில் உயர்தரக்கலாசாலை யொன்று ஸ்தாபித்தார். வல்லிபட்டியில அமெரிக்க மிஷனரி மாரின் சுகஸ்தலமாய் விளங்கும் "ஊரிக்காடு'' என்னும் ஆதனத்தை அமெரிக்க மிஷன் சங்கத்திற்கு நன்கொடையாக அளித்தனர்.

இவர் புண்ணிய மணியம் அவர்களின் புத்திரியாகிய சிவகாமிப்பிள்ளையை மணந்து இரு ஆண் மகவையீன்றனர். அப்பிள்ளைகளுள் ஒருவர் யாழ்ப்பாணம் 'பிஸ்கால்' (Fiscal) உத்தியோகஸ்தராக விளங்கி 1884 ம் ஆண்டில் விண்ணுலகடைந்த சபாபதி முதலியாராவர், மற்றவர் ஆசிரியனாயும், அத்துவக்காத்தாயும், பொலீஸ் நீதவானாயும், பல நூல்களின் ஆக்கியோனாயும், நுண்ணறிவு மிகுந்தவராயும் விளங்கிய உவைமன் கதிரவேற்பிள்ளை என்பவராவர். சிவகாமிப்பிள்ளை தமது கணவன் இறந்துவிட அக்காலந்தொடங்கி 27 வருடங்களாகத் தமது மகனாகிய கதிரவேற்பிள்ளையுடனேயே வசித்துவந்தார்
இவர் செய்த செய்யுட்களோ மிகப்பல, பொன்னை அரித்தரித்துத் தேடினாற்போலத் தேடியெடுத்தவைகள் ''குமாரசுவாமி முதலியார் கவித்திட்டு' என்னும் பெயருடன் உடுப்பிட்டி வாசராகும் திரு. சி. ஆறுமுகம்பிள்ளையால் 1887 ம் ஆண்டு அச்சிட்டு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றுள் குமாரசுவாமி முதலியாரின் மனைவியாரது பிணியை மாற்றிப் புகழ்படைத்இருபாலைச் செட்டியாரைப் புகழ்ந்தும், தம் புதல்வர் ஒருவர்க்கு விருந்தூட்டிய சுப்பிரமணிய ஐயரென்பார் ஒருவரை வியந்தும், ம்மாள் என்னும் ஒரு தேவதாசியின சங்கீதத்தை சுயந்தும் இவது வளவொன்றை  ஊடறுத்துப்போகத் தெருவெடுத்த "ஒவசியர்”' ஒருவரைக் கடிந்து அது செவ்விதாதல் வேண்டுமென அறிவித்தற்கு:

காலாயுசக் கதலிக்கந்தவேல் வைகு நல்லை
வேலாயுத முதலி மெய்யறிஞன் - பாலா நீ
சம்பந்தப்பிள்ளை பொறாற்றாம்பி மபி நல்வழிக்குச்
சம்பந்தமாதறலை"

எனவும் வேறு பல தனிப் பாக்களும் பாடியுளார். இருபாலைச் சேனாதிராய முதலியார் இறந்த சமாசாரங் காதில் விழ:

நானாதிராவிடமு நன்னிலக்கணா ரறுச்செய்
சேனாதிராயனையோ செத்த்தென்றீர் – வானாதி
பொன்னிலத்தமுண்மை புகனூலுரைப்பதற்தற்காய்
ந்நிலத்து விட்டெடுத்ததே " எனப்பாடினர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் வசித்த சரவணமுத்துப் புலவரைக் காணவிரும்பி அவருக்கு ஓர் விருத்தத்திலே திருமுகம் வரைந்தனர், அமெரிக்க மிஷன வைத்தியராய் அட்டதிக்கெங்கும்  புகழ் ஒளிவிட்டு விளங்கிய கிறீன் (Dr. S. F. Green) துரையைப் புகழ்ந்தும் சனங்களின் உள்ளங்களோடு உயிரைக் கொள்ளை கொண்ட கொள்ளை நோய் காலத்திற் பரிந்தும் பாடிய பதங்கள் பல உதயதாரகைப் பத்திரிகையிலேரந்து கிடக்கின்றன. தனிப்பாடல்கள் அன்றி நோய்க் கிரங்கல் முதலிய சில நூல்களும் செய்தனர்.

இவரும் அருளம்பல முதலியாரும் ''தஞ்சைவாணன் கோவை'' வாசித்துப் பொழுது போக்கியிருந்த ஒரு நாள் அருளம்பல முதலியார்:இந்நூலையொப்ப இச்காலத்தார்க்குஞ் செய்ய வியலுமா?” எனக்கூறினர். குமாரசாமி முதலியாரால் இயலுமென்பதை அடுத்தநாளில் அருளம்பல முதலியாரையே பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு ஒரு கோவை செய்ய ஆரம்பித்து 100 செய்யுட்களைச் செய்து காட்டினார். அருளப்பபலக் கோவையில் ஒரு பாட்டை ஈண்டுக் குறிக்கிறோம்,

திங்காளுட லக்கந்தேய்வறமாய்வறச் சித்திரைபோற்
றங்காமலந்தர மார்க்கந் தவம் புரிந்தாலுந் தமிழ்
மங்காதுடுவை வருமருளம் பல மன்ன்ன்வரைக்
கொங்கர் குழலிமுகம் போன்மென நினைக் கூற ரிதே.

பன்னாட்களாகத்தம தூரவர்களும் பிறரும் வந்து தமக்கு ஓர் புதிய நாடகம் பாடித் தரும்படி கேட்கச் சொற்சுவை பொருட்சுவை நிறைந்த இந்திர குமார நாடகத்தைப் பாடிக் கொடுத்தார். அந்நாடகத்திற் சுபத்திரை சொல் தேவாரத்தை ஈண்டுக்குறிக்கிறோம்.

நீல மார் களத்தாய் பத்தி நெறியனாருளத்தாய் சத்திவேவற்றந்
தாய் செந்தாய் வெள் விடை யகந்தாயைந்தாய்
பாலநேரத்திரத்தாய் சோதி பஞ்சவத்திரத்தாய் மேதிக்
காலனையுதைத்தாய் நீதிக்கருணை மாகடலேபோற்றி.

பிறர் வேண்டுகோளின்படி தீருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய் சித்திவிநாயகர்பேரில் ஊஞ்சல், மங்களம், சட்டிம், பராக்கு, கும்மி முதலியவைகளும் கோப்பாய் ஊஞ்சல், பெரியம்மன் பதிகமும் ஊஞ்சலும், பன்னிருமாதப் பெயரையும் முதல் நான்கு செய்யுண் முதலடிகளிலே யமைத்து எட்டு ல்லைக் கலித்துறைகளும், கந்தவன நாதரூஞ்சலும் சில கிறீஸ்தவர்கள் வேண்டுகோளின்படி, கிறீஸ்தமத கீர்த்தனங்களும் பாடியுள்ளார்.

இவர் 1874 ம் ஆண்டு மார்கழித் திங்கள் 30ம் திகதி 83 ம் வயதினில் ப்பூவுலக வாழ்வை நீத்து விண்ணுல கேகினர்.

மூலம்: Jaffna College Miscellany (December 1936)

July 21, 2018

திருவண்ணாமலையில் சுவாமி விபுலாநந்தருக்கு நல்வரவேற்பு


April 27, 2018

உடப்பு


உடைப்பு
. வி. மயில்வாகனன் B. A.
(மறுமலர்ச்சி இதழ் ஏப்ரல் 1946)

சிலாப வட்டாரத்துள்ளே தனித்தமிழ் வழங்குவோர் வாழும் சிற்றிடம் ஒன்றுண்டு. அங்கே, முன்னேவனநாதர் தோன்றிய காலத்திலேயே தமிழர், தென்னிந்தியாவிலிருந்து வந்து குடியேறி விட்டனர். யாழ்ப்பாணத்தவரைப் போலவே அவர்களும் சிங்கள நாட்டாருடன் தொடர்பு வைக்காது தம் மொழிச் சுத்தம், வாழ்க்கைத் தூய்மை முதலியவற்றைப் பாதுகாத்து வந்தனர்; இன்றும் பாதுகாக்கின்றனர். ஆதலினால் இலங்கையின் இப்பகுதியிலே பிரயாணம் செய்யும்போது யாழ்ப்பாண நினைவுகள் தோன்றும்.


படம் நன்றி: தமிழ்நெட்
உடப்பு மனிதர் மிகுசமர்த்தர். உடல் நலம் மிக்குடையார். உயர்ந்த சமயப்பற்றும் சமரசநோக்கும் உடையார். இவர்கள் அன்றாடம் உழைத்து வயிறு நிரப்புபவர்கள். ஆயினும் இவர்களிடம் பணம் இல்லாமலும் இல்லை, கடற்றொழிலாளருக்கு அரசினர் வழங்கும் சலுகைப் பணம், மொத்த மூலதனமாக இவர்களுக்கு வருடாவருடம் கிடைப்பதுண்டு. அதற்குச் சங்கங்கள் கூடி, அக்கூட்டங்களிலே செலவிடு முறையும் பிறவும் ஆராய்வார்கள்.

இந்த நாட்டுப் பணக்காரரின் அடக்கம் யாவும் திரௌபதி அம்மனுக்குப் பூசையும் விழாவும் எடுக்கையில் நன்கு விளங்கும். இங்கு இரண்டேயிரண்டு மேல்வீடுகள் உள்ளன. அவையும் பழைய முறைப்படியே எழுந்த கட்டிடங்கள், கடலை நாலாபக்கத்திலும் என்றும் மோதிக்கொண்டிருப்பினும், நாகரிக அலையோ இங்கு மாமாங்கம் போன்றே அடிக்கும். இவர்களுடைய நிலையியற் பொருட்கள் உடப்பிலன்றிக் கிழக்கே பெரு நிலத்திலேயே உள்ளன, ஆயினும், இவர்கள் தம் நாட்டிலன்றி வேறிடத்தில் வசிப்பதில்லை, கடற்றொழிலுக்கு எங்கும் திரிந்தாலும், சில மாதங்களிலே 'பொருள் வயிற் பிரிந்தார்' திரும்பு முறையில் திரும்பிவிடுவர்.

இவர்கள் பழைய முறையிற் கல்விகற்பர்; நாடகமாடுவர்; பாடுவர், படிப்பர், எங்கள் பழைய காலத்து நாட்டுக்கூத்தைப் பார்ப்பதானால், அதனை அப்படியே வாழைக்குற்றி மேலேற்றிய தீபத்தின் வெளிச்சத்தில் இன்றும் உடப்பிலே காணலாகும். இங்கே பஞ்சபாண்டவரின் பதினெட்டுநாட்போரும் மிக அழகாக நடிக்கப்படும். திரௌபதி துரியோதனனின் மார்பைப் பிளந்து இரத்தமெடுத்துத் தன் கூந்தலிற் பூசி முடிவது பார்க்கப் பயங்கரமாக நடிக்கப்படும்.

விருந்தினரை உபசரிப்பதில் உடப்பு மனிதர் யாழ்ப்பாணத்தவர்க்குப் பின் நில்லார், பலநாட் பழகினும் தலைநாட் பழகியோரைப்போலத் தலையாய அன்பு பாராட்டி உவந்தேற்பர்; அன்பிற் குழைத்த அமுதினையே ஆரவுண்ண உவந்தளிப்பர்; விருந்துவிட்டுச் செல்லும்போது பன்முறை பிரியாவிடையும் தருவர்.

இவர்களுடைய கோயிற் புதுமைகள் சில, எமக்குப் பெரு வியப்புத்தருவன, பதினெட்டு நாளும் கோயிலில் விழா நடக்கும்பொழுது, ஒரு கும்பம் அமைக்கப்பட்டிருக்கும். அதன் மேல்விழும்பில் ஒரு வாள் செங்குத்தாக நிறுத்தி வைக்கப்படும். அதனை வைக்கும் கோயிற் பூசகர், வேலனாடுபவர்போல் ஆவேசம் கொண்டுதான் அதனை வைப்பர்; அதுவும் அருள்வலியால் நிற்கும், ஆனால், சிறிது நேரத்தில் விழுந்துவிடும். இப்படியே பதினெட்டு நாளும் வாள் வைக்கப்படும். கடைசி நாளில் இவ்வாள் ஓர் இரவும் ஒரு பகலும் சிறு திட்டமாக நிற்கும். இதனை யான் கண்ணாரக் கண்டேன், அந்தக் கடைசித் தினத்தில் இதன் வலிமை உச்சநிலை ஏறிவிடும் என்பது துணிபு. இந்த வாள் தான் பாண்டவரின் போர்முனையில் மேற்செல்வதும், துரியோதனன் மார்பைக் கிழிப்பதும், உதிர இரசம் பருகுவதும்.

 படம் நன்றி: விக்கிமீடியா பொது
மற்றது தீமிதிப்பு. கதிர்காமத்தில் பத்தியோடு தீமிதிப்பு நடக்குமென்பர். இங்கே பத்தி இல்லாமலில்லை. அதுவும் உண்டு, ஆனால், இத் தீமிதிப்பைப் பார்த்து நிற்போருக்கு மனத்தில் வேறாகத் தென்படும். நாம் நாளாந்தம் உண்பதுபோலவோ உறங்குவதுபோலவோ இத் தீமிதிப்பு நிகழுகிறது. சிறு பாலர் தொடக்கம் விழுகிறவர் வரை பெண்கள் உட்படப் பலர், பல முறை தீயுட்சென்று மீள்வர். சுமார் 200 பேர் யாதொரு கவலையுமின்றித் தழல்மேற் சென்று வருவதைப்பார்க்க, இது ஒரு போட்டி முறையில் நிகழ்வதுபோலவே தோன்றும்.

 படம் நன்றி: விக்கிமீடியா பொது
இங்குள்ளோர்களின் பெயர்களைக் கேட்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். 'உடப்பாத்தி'யர் பெயர் வரிசையிற் சிலவற்றைப் பார்க்கலாம்:

கதிர்காமத்தையா, கதிரம்மை, ஐயாத்தைக்குட்டி, மருந்து விச்சி, சின்னமாமி, அஞ்சிக்குட்டி, பொக்காளி, பூவாய், மோனம்பா, பிச்சைக்காரி, பிச்சைக்காரன், சல்லராக்கு. கனசம்மா, பிச்சைமண்டாடி, சம்மாட்டி, சின்னாத்தாள், அடப்பனாக்குட்டி, சாத்தக்கா, சரவணம், வைரடப்பன், பூவடப்பன், மூக்குத்தி, திமிங்குமுத்து.


இவற்றின் தோற்றம் ஆராய்ச்சிக்கு இடமளிப்பது.

ஏனைய இடங்களைப்போலன்றி உடப்பு நாட்டில் மனிதரின் பெயர்கள் விசித்திரப் பொருளுடையனவாய்க் காணப்படுகின்றன, இவ்வூரவர்கள் தனிப்பட்ட வாழ்வு வாழ்வதே அதற்குக் காரணம்போலும். இவர்களுக்கு இலங்கையிலும் பார்க்க இந்தியத் தொடர்பு கூடிய அளவு முன்பு இருந்ததாயினும் இப்பொழுது அப்படிக் கூறுவதற்கில்லை. என்றாலும் பல்வேறு வித்தியாசங்கள் தோன்றுகின்றன.

நல்லராக்கு, குரிசில், குரிசு, இராக்குரிசு, நல்லராக்குரிசு: இவ்வூர்வாசிகளால் குலதெய்வமாக வணங்கப்பட்டு வருகின்ற இராக்குரிசு என்ற பெண் தெய்வத்திற்கு முந்தல் என்னுமிடத்தில் ஒரு கோயில் உண்டு. அதற்கு உடப்பு மனிதர் நேர்த்தி செய்வர். தங்கள் பிள்ளைகளுக்கும் நல்ல, முத்து என்னும் அடைகளையும், அப்பன், ஆய் என்னும் விகுதிகளையும் இராக்குடன் கூட்டிச் சூட்டி விடுவர். ஆண் நல்லராக்கப்பன் எனவும் பெண் முத்துராக்காய் எனவும் தோற்றுவர். (ஆய்= ஆய்ச்சி)

மூக்குத்தி: பெற்றார் தம் குழந்தைகள் ஒன்றன் பின்னொன்றாக இறப்பதைக் கண்டு வருந்தி, தம் மூன்றாம் ஆண் குழந்தைக்கு மூக்கிலே குத்தி வடுப்படுத்தினால் குழந்தை இறவாது உயிருடனிருக்கும் என்னும் கொள்கையுடையர். ஆதலின் அப்படிச் செய்து வேறு பெயரும் இடுவர். பின்பு அவர்கள் சந்ததிக்கே, மூக்குக் குத்தாத ஆண்களுக்கும் இப் பெயர் சொந்தமாகி விட்டது.

சம்மாட்டி: சம்மான் + ஓட்டி, சம்மான் என்பது சிறு தோணி அல்லது பாதை. அதனை ஓட்டுபவன் சம்மானோட்டி எனப்பட்டான். இது நெய்தல் நில மக்களுக்குப் பெயராக மாறி இப்பொழுது சாதாரணமாக எல்லோர்க்கும் இடப்படுகிறது.

மண்டாடி: மண்டு+ஆடி.. கடற்றொழில் செய்யும் 20, 30 பேரைக் கொண்ட ஒரு கூட்டத்தாரை மேற்பார்வையிடுவோன் மண்டாடி. அவனுடைய உத்தரவுப்படியே தொழில் நிகழும். இது இப்போது குடும்பப் பெயராகிவிட்டது. இது மன்றாடி (மன்று + ஆடி) = சிவபெருமான் என்றும் பொருள்படலாம்.

நம்பாய்: நம் + அம்பு + ஆய். தேவி வழிபாட்டாளர் சூட்டும் பெயர். அம்பாள் என்னும் பெயர் அம்பாவாகக் குறுகிப் பின் அம்பாய் என்றும் வந்திருக்கலாம்.

ஐயாத்தைக் குட்டி; ஐயன் + ஆத்தை+குட்டி, இது பெண்களுக்கு வழங்கும் பெயர். குட்டி என்பது இப்பாகங்களில் இளம் பெண்களுக்குப் பொதுவாக வழங்கும் பெயர், “எங்கே குட்டி போகிறாய் என்று இருபது வயதுப் பெண்ணையும் கேட்பார்கள். ஐயாத்தைக் குட்டி என்பது ஐயனைப் பெற்ற தாயாகிய பெண் எனலாகும். இவ்வூரவர்கள் பாண்டவதாசர்கள். ஆதலால் பாண்டவர்களாகிய ஐயம்பெருமாளையும் வணங்குவர்.

பூவடப்பன்: அடப்பன் என்பது நெய்தல் நில மக்களுக்குப் பெயர். பூ, வைரம் முதலியன அடையாக இதனுடன் வரும். பூ+ ஆடு+ அப்பன் = பூவடப்பனாக வந்திருத்தலும் கூடும்,

இவ்வூரவர் இந்தியாவிலும் கடற்கரையோரம் குடியிருந்து, பின் மன்னார், புத்தளம், முந்தல் முதலிய இடங்களில் சிற்சில காலம் தங்கி, ஈற்றில் இங்கு வந்தவர், தமது நிலப்பெயர்களையும் தம்முடன் கொண்டுவந்துள்ளனர். இப்படிப்பட்ட பெயர்களும் கருத்துக்களும் உடப்பு மக்களின் சரித்திரத்தை எழுதும்போது ஆதாரமாக வரக்கூடியன.

எழுதியவர்:. வி. மயில்வாகனன் B. A.
1946 ஏப்ரல் மாத மறுமலர்ச்சி இதழில் வெளிவந்தது.
நன்றி: http://www.noolaham.org