November 17, 2016

என். சி. வசந்தகோகிலம் பாடிய அரிய பாடல் ஒன்று

இலங்கை வானொலியில் "குரல் வகை" நிகழ்ச்சியில் ஒலிபரப்பான போது பதிவு செய்திருந்த பாடல் அண்மையில் யூடியூபில் பதிவேற்றினேன்.

பழம்பெரும் பாடகி என். சி. வசந்தகோகிலம் (1919 - 7 நவம்பர் 1951) அவர்கள் 1948 சனவரியில்  காந்தியடிகள் இறந்து ஒரு சில நாட்களில் அவருக்கு நினைவஞ்சலியாகப் பாடியது.

பாடியவர்: என். சி. வசந்தகோகிலம்

பாடல் வரிகள்:
தந்தை தாய் காட்டிடாத
தனிப்பெரும் கருணை தாங்கி வந்தனை
தியாகத்தீயில் வெந்தனை
அகிம்சையாலே இந்திய நாட்டினிற்கு
சுதந்திரம் ஈன்ற காந்தி
அகிம்சையாலே இந்திய நாட்டினிற்கு
சுதந்திரம் ஈன்ற காந்தி
எந்தமைப் பிரிந்த செய்தி எப்படி நம்புவோமே
எந்தமைப் பிரிந்த செய்தி எப்படி நம்புவோமே
சத்தியம் உள்ளமட்டும் தருமமே வெல்லுமட்டும்
உத்தமர் பொறுமையாலே
உத்தமர் பொறுமையாலே
உயிர் நலம் உயரும் மட்டும்
வித்தக பரத நாட்டின் புண்ணியம் விளங்கும் மட்டும் இத்தலம் உள்ளமட்டும்
எவருன்னை மறப்பார் ஐயா
காந்தி மகாத்மா எவருன்னை மறப்பார் ஐயா!

விக்கிப்பீடியாவில் என். சி. வசந்தகோகிலம் பற்றி எழுதிய கட்டுரை

June 03, 2016

சிலோன் மெயில்

1951 "பேசும் படம்" இதழ்கள் இரண்டில் வெளிவந்த சிலோன் மெயில் பக்கங்கள்.

இலங்கையின் முதலாவது திரைப்படக் கலையகம் "சிறீ முருகன் நவகலா மூவிடோன்" ஆரம்ப விழா பற்றிய செய்தி. இது பேசும் படம் 1951 யூன் இதழில் வெளிவந்தது:





சினிமாஸ் தியேட்டர்ஸ் அதிபர் கேஜி என அழைக்கப்படும் கே. குணரத்தினம் அவர்கள் பற்றிய ஒரு செய்தி. இது பேசும் படம் 1951 ஆகத்து இதழில் வெளியானது. இவர் 1989 மஐமு வன்முறைகளில் கொழும்பில் கொல்லப்பட்டவர். https://ta.wikipedia.org/s/31v8